சிந்துசமவெளி நாகரிகம்
ராஜாவிற்கு நிர்வாகத்தில் உதவி செய்தவர்கள் - புரோகிதர், சேனானி (படைத்தலைவர்)
ராஜாவிற்கு உதவி செய்த அமைப்புகள் - சபா, சமிதி
சபா - முதியோர் அவை
சமிதி - ஊர்மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட அவை
ரிக் வேத கால மக்கள் தெரிந்து வைத்திருந்த தொழில்- கால்நடை வளர்ப்பு மற்றும் வேளாண்மை, தச்சு வேலை, நூல் நூற்றல், பருத்தி, கம்பளி ஆடைகள் உற்பத்தி.
வணிகத்தில் நிஷ்கா என்ற தங்க அலகுகள் பயன்படுத்தப்பட்டன.
பிற்பட்ட வேதகாலம்
பிற்பட்ட வேதகாலம் (கி.மு. 1000 - கி.மு.600) - ரிக் வேத காலத்திற்குப் பின்னர், சாம, யஜுர், அதர்வண வேதங்களின் காலமே பிற்பட்ட வேதகாலம்
முற்பட்ட மற்றும் வேதகால மக்கள் காபூலிலிருந்து மேல் கங்கைவரை பரவி இருந்தனர்.
பிற்பட்ட வேதகாலத்தில்தான், கங்கைச் சமவெளியில் கோசலம், விதேகம், குரு, மகதம், காசி, அவந்தி, பாஞ்சாலம் போன்ற அரசுகள் தோன்றின.
அரசப் பதவி பரம்பரைப் பதவியானது.
வேள்விகள் இந்தக் காலத்தில்தான் அதிகரித்தது.
ராஜசூயம், அஸ்வமேதம் போன்ற யாகங்கள் மன்னரின் பேராதிக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் செய்யப்பட்டன.
ஒருவரிடம் இருந்த கால்நடைகளின் எண்ணிக்கையைப் பொருத்து, அவரது செல்வ நிலை மதிப்பிடப்பட்டது.
நிஷ்கா, சுவர்ணா, சதமானா போன்ற தங்க, வெள்ளி நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன.
சாதி அமைப்புமுறை தோன்றி வலுப்பட்டது.
கார்கி, மைத்ரேயி போன்ற பெண்கள் கல்வியில் சிறந்து விளங்கினர்.
திராவிடர்கள்:
இருண்ட நிறமும், நடுத்தரமான உயரமும் கருமையான தலைமுடியும் உடையவர்கள்.
முதன்மைத் தொழில்; பயிர்த்தொழில், வணிகம்
பருத்தி ஆடை உடுத்தினர்.
முக்கிய விலங்கு எருது
சுட்ட செங்கற்களால் வீடுகளைக் கட்டினர்.
வழிபாடு: கோயில் வழிபாடு, சிலை, லிங்கம், சூலம், சக்தி, நாகம்
செம்பு உலோகத்தை பயன்படுத்தினர். இரும்பை அறிந்திருக்கவில்லை.
புலியை அறிந்திருந்தனர்; ஆனால், குதிரை பற்றி தெரியாது.
ஆரியர்கள்:
வெள்ளை நிறமும், உயரமான உருவமும், செம்பட்டையுமான முடியும் உடையவர்கள்.
முதன்மைத் தொழில் ; கால்நடை வளர்ப்பும், போர் புரிதலும்
கம்பளி, பருத்தி மற்றும் விலங்குகளின் தோலை உடுத்தினர்.
முக்கிய விலங்கு பசு.
களிமண் மற்றும், மூங்கில்கள் கொண்ட வீடுகளை அமைத்தனர்.
வழிபாடு; யாகம் செய்தல், சிலைகளும், கோயில்களும் இல்லை; இந்திரன் அக்னி, வருணன்.
இரும்பை அறிந்திருந்தனர்.
புலி அறியார்; குதிரைகளைப் பயன்படுத்தினர்.
சமணமும், பௌத்தமும்:
கி.மு. 6ஆம் நூற்றாண்டில்தான் இந்தியாவில் பௌத்தமும், சமணமும் தோன்றின.
சமண மதத்தை உருவாக்கியவர் வர்த்தமான மகாவீரர்.
பௌத்த மத கருத்துக்களை வழங்கியவர் கௌதமபுத்தர்.
சமண மதத்தினரால் 24 தீர்த்தங்கரர்கள் வழிபடப் படுகின்றனர்.
முதல் தீர்த்தங்கரர் ஆதிநாதர் எனப்படும் ரிஷபதேவர் ஆவார்.
24வது தீர்த்தங்கரர் வர்த்தமான மகாவீரர்
வர்த்தமான மகாவீரர்:
இவரின் காலம் கி.மு. 534 - கி.மு. 462
இன்றைய பீகார் மாநிலத்தில் வைசாலி நகருக்கு அருகிலுள்ள குந்தக்கிராமம் என்னும் ஊரில் பிறந்தார்.
இவரது தந்தையார் பெயர் சித்தார்த்தர்; தாயின் பெயர் திரிசலை.
மனைவி பெயர் யசோதா; அனோஜா பிரியதர்சனா என்ற மகளும் இருந்தனர்.
இல்வாழ்க்கையை துறந்தது 30ஆம் வயதில்.
தியானத்தில் ஆழ்ந்த வருடங்கள் மொத்தம் 12.
வெற்றியாளர் என்பதைக் குறிக்கும் ஜீனர் என்ற சொல்லால் அழைக்கப்பட்டார்.
மக்கள் அவரை ‘மகாவீரர்’ என்று அழைத்தனர்.
வர்த்தமானர் போதித்த மும்மணிகள் ; நல்லறிவு, நன்னம்பிக்கை, நன்னடத்தை.
சமண சமயத்தைப் பின்பற்றி அரசர்கள்; சந்திரகுப்த மௌரியர், கலிங்கத்துக் காரவேலன், கூன் பாண்டியன், முதலாம் மகேந்திரவர்ம பல்லவர்.
சமணர்களின் தமிழ் இலக்கிய, இலக்கணப் படைப்புகள் ; சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி, சூளாமணி முதலிய காப்பியங்கள் மற்றும் யாப்பருங்கலக்காரிகை, யாப்பருங்கலவிருத்தி, நேமிநாதம், நன்னூல், அகப்பொருள் விளக்கம், இலக்கண விளக்கம் போன்ற இலக்கண நூல்களையும், நிகண்டுகளையும், நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி, திணைமாலை நூற்றைம்பது முதலிய அற நூல்களையும் இயற்றியவர்கள் சமணர்கள்.
சமணக் கட்டடக் கலை: ராஜஸ்தான் -மவுண்ட் அபு, தில்வாரா கோயில். கஜுராஹோ, சித்தூர், ரனக்பூர் - சமணர் கோயில்.
சமணர்களின் புனித நூல்கள் - அங்கங்கள், பூர்வங்கள்.
பௌத்த மதம்:
தோற்றுவித்தவர் - சித்தார்த்தர் எனும் கௌதமபுத்தர்.
வாழ்ந்த காலம் - கி.மு.563 - கி.மு.483.
நேபாள நாட்டில் உள்ள கபிலவஸ்து எனும் ஊரில் பிறந்தார்.
இவரது தந்தை சாக்கியக் குலம். தந்தை சுத்தோதனர், தாய் மாயாதேவி.
யசோதரையை மணந்தபோது சித்தார்த்தருக்கு வயது 16.
மகன் பெயர் ராகுலன்.
புத்தர் என்ற சொல்லின் பொருள் நல்லது எது,கெட்டது எது என்பதை அறிந்து கொண்டவர் என்பது ஆகும்.
புத்தர் தனது முதல் போதனையை உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசியின் அருகே சாரநாத்தில் உள்ள மான் பூங்காவில் தொடங்கினார்.
புத்த மதம் ஹீனயானம், மஹாயானம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
ஹீனயானம் - புத்தரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர்கள். உருவ வழிபாடு செய்யாதவர்கள்.
மஹாயானம் - புத்தரைத் தெய்வமாக ஏற்றுக்கொண்டவர்கள். உருவ வழிபாடு செய்பவர்கள்.
பௌத்த மதத்தைப் பின்பற்றிய அரசர்களில் முக்கியமானவர் - அசோகர், கனிஸ்கர், ஹர்ஷர்.
பௌத்த சமயக் கொள்கைகளைக் கூறும் மறைநூலுக்குத் திரிபிடகம் என்று பெயர். இது வினயபிடகம், சுத்த பிடகம், அபிதம்மபிடகம் என்ற மூன்று உட் பிரிவுகளைக் கொண்டது.
மணிமேகலையும், குண்டலகேசியும் பௌத்த நூல்கள்.
பௌத்த சமய வரலாற்றை பெரிதும் விளக்கும் நூல் - ஜாதகக் கதைகள்.
காந்தாரக் கலை சிற்பங்களும் புத்த சமயத்தைச் சார்ந்தவையே.
பௌத்த சமயத் துறவிகளின் பிரார்த்தனைக் கூடங்கள் சைத்தியங்கள் என்றும், மடாலயங்கள் விகாரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
திரிபிடகம் முதன்முதலில் நூல் வடிவில் எழுதப்பட்டது வட்டக் காமினி அபயன் என்னும் அரசன் காலத்தில்.
திரிபிடகம் என்பதற்கு மூன்று கூடை என்பது பொருள்.
மகாஜனபதங்கள்:
புத்தர் காலத்தில் வட இந்தியாவில் பதினாறு மகாஜனபதங்கள் மேலோங்கி இருந்தன.
16 மகாஜனபதங்கள்: 1. அங்கம் 2. மகதம் 3. கோசலம் 4. காசி 5. வஜ்ஜி 6. மல்லம் 7. கேதி 8. வத்சம் 9. குரு 10. பாஞ்சாலம் 11. மத்ஸ்யம் 12. சூரசேனம் 13.அஸ்மகம் 14. அவந்தி 15. காந்தாரம் 16. காம்போஜம்.
பிம்பிசாரர்:
அரியங்க வம்சத்தைச் சேர்ந்தவர்.
பிம்பிசாரரின் மகன்தான் அஜாதசத்ரு. தந்தையையே சிறையில் அடைத்து ஆட்சியைக் கைப்பற்றினார். பாடலிபுத்திரத்தில் பெரிய கோட்டையை அமைத்தவரும் இவரே.
அரியங்க வம்சத்தை வீழ்த்தியவர் - சிசுநாகர்.
சிசுநாகர் - நந்தவம்சத்தைச் சேர்ந்தவர்.
மகதத்தின் ஆட்சியை வட இந்தியா வரை பரப்பியவர் சிசுநாகர்தான்.
முதல் நந்தமன்னர் மகாபத்மநந்தன் விந்திய மலைகளைக் கடந்து தக்காணப் பகுதிகளைக் கைப்பற்றினார்.
சிந்து நதி முதல் தக்காணம் வரை பரந்துவிரிந்த முதல் இந்தியப் பேரரசை உருவாக்கியவர் மகாபத்மநந்தன்.
நந்தவம்சத்துப் பேரரசர்கள் சமண சமயத்தைப் போற்றினார்கள்.
மௌரியப் பேரரசு:
நந்தமன்னரான தனநந்தனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து, போரில் வென்று மகதப் பேரரசை மௌரிய வம்சத்தைச் சேர்ந்த சந்திரகுப்தர் கைப்பற்றி ஆண்டார்.
கிரேக்க மன்னர் செலூகஸ் நிகேடார் என்ற கிரேக்க மன்னரைத் தோற்கடித்து, ஆப்கானிஸ்தானம், காந்தாரம் போன்ற பகுதிகளை சேர்த்த பெருமையும் சந்திரகுப்தரையே சாரும்.
சந்திரகுப்தரது காலத்தில்தான் செலூகஸின் தூதுவரான மெகஸ்தனிஸ் என்ற கிரேக்க அறிஞர் பாடலிபுத்திரத்தில் பல ஆண்டுகள் தங்கி இந்தியாவைப்பற்றி இண்டிகா எனும் நூலை எழுதினார்.
சந்திரகுப்த மௌரியருக்குப்பின் அவரது அரியணையில் இருந்து ஆட்சியை 25 ஆண்டுகள் மேற்கொண்டது அவரது மகன் பிம்பிசாரர்.
பிம்பிசாரரின் மகன்களில் ஒருவர்தான் அசோகர்.
பிம்பிசாரருக்குப் பிறகு மௌரியப் பேரரசை ஆண்டவர் அசோகர்.
மௌரியப் பேரரசில் இருந்து பிரிந்துசென்ற கலிங்கத்தை மீண்டும் சேர்க்க கடுமையான போரை மேற்கொண்டார். அந்தப் போரில் வெற்றிபெற்று கலிங்கத்தை மௌரியப் பேரரசுடன் இணைத்தார். ஆனால், அந்தப்போரில் ஏற்பட்ட உயிர்ச் சேதத்தைப் பார்த்துவிட்டு, இனி போரிடுவதில்லை என்னும் உறுதி எடுத்தார்.
படையெடுத்துப் போர் செய்து வெற்றி பெறுவது திக் விஜயம் என்று அழைக்கப்பட்டது.
மக்களிடம் தர்மத்தை வளர்க்க மேற்கொண்ட பயணம் தர்ம விஜயம் என்றும் அழைக்கப்பட்டது.
மக்களுக்கு உதவுவதற்காக அசோகர் நியமித்த பணியாளர்கள் தர்மமகாமாத்திரர்கள் என அழைக்கப்பட்டனர்.
இந்தியாவில் முதன் முதலில் மக்கள் நல அரசை உருவாக்கிய சிறப்பு அசோகரையே சாரும்.
பௌத்த மதத்தைப் பின்பற்றினார்.
கபிலவஸ்து, சாரநாத், புத்தகயா போன்ற இடங்களில் பௌத்த நினைவிடங்களை விரிவுபடுத்தினார்.
அசோகர் காலத்து கல்வெட்டுகள் பெரும்பாலும் பிராகிருத மொழியில் எழுதப்பட்டவை.
அசோகர் ஆட்சியில் எல்லைப் பகுதியில் பாதுகாப்பை மேற்கொண்டவர்கள் ‘அந்தமகாமாத்திரர்’ என்று அழைக்கப்பட்டனர்.
0 comments:
கருத்துரையிடுக