தமிழகம்:
குரூப் 4 தேர்வு மட்டுமல்லாது, டி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வுகள் அனைத்திலும் தமிழகம் சார்ந்த கேள்விகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகம் பற்றிய முக்கியத் தகவல்களை இங்கு தொகுத்துள்ளோம்.
தமிழ்நாட்டின் எல்லைகள்
திசை எல்லை
வடக்கு ஆந்திரப்பிரதேசம் மற்றும் கர்நாடகம்
தெற்கு இந்தியப் பெருங்கடல்
கிழக்கு வங்காளவிரிகுடா
மேற்கு கேரளா
தமிழ்நாட்டின் காலநிலை
தென்மேற்குப் பருவக்காற்றின் மூலம் ஜூன் முதல் செப்டம்பர் வரை மழை பெறும். இதன் மூலம் தெற்கு தமிழகம் பயன் பெறும்.
வடகிழக்குப் பருவக்காற்றின் மூலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரை மழை பெறும். இதன் மூலம் பரவலாக தமிழகம் முழுவதும் பயன் பெறும்.
மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ளமலைகள்:
1. நீலகிரி மலை 2. பழனி மலை 3. குற்றால மலை 4. அகஸ்தியர் மலை 5. மகேந்திரகிரி மலை 6. ஏலக்காய் மலை 7. வருஷநாடு மலை 8. சிவகிரி மலை
கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ளமலைகள்:
1. ஜவ்வாது மலை 2. ஏலகிரி மலை 3. செஞ்சி மலை 4. கல்வராயன் மலை 5. பச்சை மலை 6. கொல்லி மலை 7. சேர்வராயன் மலை 8. செயின்ட் தாமஸ் குன்றுகள்
மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சிகரங்கள்:
1. ஆனை முடி - 2695 மீ 2. தொட்டபெட்டா - 2637 மீ
கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சிகரங்கள்: மகேந்திரகிரி - 1501 மீ
மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள கணவாய்கள்:
1. பாலக்காட்டுக் கணவாய் 2. தால்காட் கணவாய் 3. போர்காட் கணவாய் 4. செங்கோட்டைக் கணவாய் 5. ஆரல்வாய் கணவாய்
தமிழ்நாட்டில் உள்ள மலைகள்:
சேர்வராயன் மலை, கொல்லி மலை, தீர்த்த மலை, ஜவ்வாது மலை, கல்வராயன் மலை, பச்சை மலை, பழனி மலை, நீலகிரி மலை.
கொங்கு மண்டலம்:
காவிரிக்கும், பாலக்காட்டுக்கும் இடையில் உள்ளது (ஈரோடு, கோயம்புத்தூர், சேலம், நீலகிரி, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி)
0 comments:
கருத்துரையிடுக