வந்து போனவர்கள்

சனி, 14 ஜூலை, 2012

TNPSC தமிழ் இலக்கணம் - ஒற்றுப் பிழைகள் பகுதி 2


வல்லெழுத்து மிகா இடங்கள்:
          கீழ்வரும் உதாரணங்களின் படி இரு சொற்கள் சேரும்போது, இரண்டாவது சொல்லின் முதலில் வரும் எழுத்து "க், ச், த், ப்," முதலிய நான்கு மெய்யெழுத்துகளில்
உருவான உயிர் மெய்யெழுத்துக்களாக இருப்பின் (உம் - க, கா, ச, சா, த, தா, ப, பா முதலானவை) நடுவிலே க், ச், த், ப் ஆகிய வல்லின மெய்யெழுத்துக்கள் சில விதிகளின் படி, சில சொற்களில் மட்டும் நடுவில் சேருமிடங்களையே வல்லெழுத்து மிகுதல் என்கிறோம். தேர்வுகளிலும், கட்டுரைகளிலும் மாணவர்கட்கு மதிப்பெண்கள் குறைவதற்கு முக்கிய காரணம் வல்லெழுத்து மிகும்/மிகா இடங்களை அறியாமையே. சாதாரணமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விதிகள் மட்டுமே இங்கு விளக்கப் பட்டிருக்கிறது. இவற்றை நினைவு கொண்டாலே பெரும்பால பிழைகளை நீக்கிவிடலாம். :-
வல்லெழுத்து மிகா உதாரணங்கள்::-
அத்தனை, இத்தனை, எத்தனை, அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு, அவை, அது, இவை, இது, எவை, எது, யாவை, ஏது.

§  அத்தனை + பெரியது = அத்தனை பெரியது.
§  இத்தனை + சிறியது = இத்தனை சிறியது.
§  எத்தனை + தூரம் = எத்தனை தூரம்?
§  அவ்வளவு + கருணை = அவ்வளவு கருணை.
§  இவ்வளவு + கோபம் = இவ்வளவு கோபம்.
§  எவ்வளவு + தூரம் = எவ்வளவு தூரம்?
§  அவை + பெரியவை = அவை பெரியவை.
§  அது + பெரியது = அது பெரியது.
§  இவை + சிறியவை = இவை சிறியவை.
§  இது + சிறியது = இது சிறியது.
§  எவை + தந்தன = எவை தந்தன?
§  எது + தந்தது = எது தந்தது?
§  யாவை + பெரியவை = யாவை பெரியவை?
§  ஏது + கடல் = ஏது கடல்?

ஒற்றெழுத்து மிகாத சில முக்கியமான இலக்கணக் குறிப்புகள்::-
           எழுவாய்த் தொடர்களில் (முதல் வேற்றுமை), ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தவிர்த்து பிற பெயரெச்சங்களில், வினைத்தொகைகளில், உம்மைத்தொகைகளில், "த்த", "ந்து" என முடியும் சொற்களையடுத்து ஒற்று மிகாது. உதாரணங்கள் கீழே தரப்பட்டுள்ளன. :- -

1.      எழுவாய்த் தொடர் (முதல் வேற்றுமை):-

(உ-ம்)
அவர் + படித்தார் = அவர் படித்தார்,
கனிமொழி + சிரித்தாள் = கனிமொழி சிரித்தாள்,
2.      ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தவிர பிற பெயரெச்சங்கள்:-

(உ-ம்)
நல்ல + பாம்பு = நல்ல பாம்பு
அடித்த + புயல் = அடித்த புயல்
3.      வினைத் தொகைகள்:-

(உ-ம்)
ஊறு + காய் = ஊறுகாய்
வளர் + பிறை =வளர்பிறை
4.      உம்மைத் தொகைகள்:-

(உ-ம்)
இரவு + பகல் = இரவு பகல் (இரவும் பகலும்) சேர +சோழ + பாண்டியர் = சேர சோழ பாண்டியர் (சேரரும், சோழரும், பாண்டியரும்)
5.      "த்த, ந்து" என முடியும் சொற்கள்:-

(உ-ம்)

பார்த்த + பெண் = பார்த்த பெண்
வந்து + சென்றாள் = வந்து சென்றாள்

Post Comment

0 comments:

கருத்துரையிடுக

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More