பார்வை குறைபாடு உடையவர்களுக்கான அபூர்வ கண்ணாடி ஒன்றை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது ஒரு அரிய கண்டுபிடிப்பு. இந்த கண்ணாடியின் பிரேமிலுள்ள ஸ்குருக்களே ஒரு விதமான காமிராக்களால் ஆனது. இந்த காமிராக்கள் ஒரு மொபைல் போன் அளவிலான சிறிய கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சிறிய கம்ப்யூட்டரை பாக்கெட்டிலேயே வைத்துக்கொள்ளலாம்.
இந்த கண்ணாடியின் முன் வரும் எவரையும் அல்லது எதையும் இந்த காமிராக்கள் படம் பிடித்து கம்ப்யூட்டருக்கு அனுப்புகிறது. கம்ப்யூட்டர் அதனுடன் இணைந்த கண்ணாடியின் உள்பக்கம் அமைந்துள்ள எல் ஈ டி க்களை ஒளிரச்செய்வதன் மூலம் கண்ணாடியை அணிந்திருக்கிறவருக்கு தனக்கு எதிரே வருபவரை அல்லது வருபவற்றை அறிவுறுத்துகிறது. இந்த கண்ணாடியை பயன்படுத்தி பஸ் நம்பர்கள், ரயில்வே அட்டவணை போன்றவற்றை தெரிந்து கொள்ளமுடியும் என்பது இதன் சிறப்பு. இந்த கண்ணாடியை பயன்படுத்துபவர்கள் ஏ டி ஏம் வசதியைக்கூட சிரமமின்றி பயன்படுத்த முடியுமென்று இதனை வடிவமைத்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 2014 ல் சந்தைக்கு வர இருக்கிற இந்த கண்ணாடி நிரந்தர பார்வை குறைபாடு உடையவர்களுக்கு மட்டுமல்ல முதுமை காரணமாக பார்வை குறைபாடடைந்தவர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும் என்று தெரியவருகிறது. இதனை குறைந்த விலைக்கு வழங்கவும் அதிக எடை இல்லாததாக செய்யவும் மேற்கொண்டு ஆராய்ச்சி நடந்து வருகிறது.

0 comments:
கருத்துரையிடுக