வந்து போனவர்கள்

ஞாயிறு, 25 டிசம்பர், 2011

விரல்ரேகை மூலம் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் புதிய முறை

குற்றப்புலனாய்வில் முக்கிய பங்கு வகிப்பது குற்றவாளியின் கைரேகை. புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில் நுட்பம் ஒன்று கைரேகையை வைத்து குற்றவாளி குற்றத்தில் ஈடுபடுவதற்கு முன் போதை மருந்து உட்கொண்டிருந்தாலும், வெடி பொருட்களை கையாண்டிருந்தாலும் அதனை காட்டிக்கொடுத்து விடுகிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஷீஃபீல்டு ஹாலம்
பல்கலைகழக விஞ்ஞானிகள் இதனை கண்டுபிடித்துள்ளனர். குற்றவாளியின் பழக்க வழக்கங்கள் மற்றும் செயல்பாடுகளை துல்லியமாக காட்டிக்கொடுத்துவிடுகிறது இந்த புதிய கைரேகை ஆய்வு. இன்னும் மூன்றாண்டுகளுக்குள் அறிமுகப்படுத்தப் படவுள்ள இந்த கண்டுபிடிப்பு குற்றப்புலனாய்வில் பெரிய மாற்றங்களை கொண்டு வரும் என்று கூறப்படுகிறது. இதுவரையிலும் ரேகையிலுள்ள கோடுகளை குற்றவாளிகளின் ரேகையுடன் ஒப்பிட்டு பார்ப்பது வழக்கம். விரல்களால் தொடும் பொருட்களின் நுண்ணிய துகள்கள் விரலில் ஒட்டிக்கொள்ளுமாம். அது மட்டுமல்லாமல், உடலில் சுரக்கும் திரவங்கள் கூட விரல்களில் தங்கி விடுவதுண்டாம். எனவே, ஒருவரது விரல் ரேகையிலிருந்து அவர் என்னென்ன பொருட்களை தொட்டிருந்தார் என்பது முதல் அவரது உடல் வெளியிட்ட திரவங்கள் வரை அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும் என்கிறது இந்த ஆய்வு.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More