வந்து போனவர்கள்

செவ்வாய், 27 டிசம்பர், 2011

கல்லீரல் சிகிச்சைக்கு பயன்படும் புதிய ஸ்டெம் செல் சிகிச்சை முறை

மருத்துவ உலகில் ஒரு சாதனையாக கருதப்படுவது ஸ்டெம் செல் சிகிச்சை முறை. செல்லின் அடிப்படை பண்புகளை கொண்டிருப்பதோடு வேறு எந்த செல்லாகவும் மாற்றம் பெற்று வளர்ச்சியடையும் தன்மை வாய்ந்த ஸ்டெம் செல்கள் பெரும்பாலும் கருப்பகுதியிலிருந்து பிரித்தெடுத்து உருவாக்கப்படும் நிலையில்
தற்போது தோல் மற்றும் இரத்த செல்களில் இருந்து ஸ்டெம் செல்லானது உருவாக்கப்பட்டு கல்லீரல் செல்களாக மாற்றப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் உடலிலிருந்தே பல லட்சக்கணக்கான எண்ணிக்கையில் எளிதான முறையில் உருவாக்கப்படும் பக்கவிளைவுகள் அற்ற இத்தகைய செல்களை தூண்டுவிக்கப்பட்ட புளுரிபொடென்ட் ஸ்டெம் செல் (ஐ.பி.எஸ்.சி.) என அழைக்கின்றனர். பாதிக்கப்பட்ட இடத்தில் புதிய உறுப்பாக வளரும் அளவிற்கு தன்மை கொண்ட இந்த ஸ்டெம் செல்கள் குறித்து மேரிலேண்டில் அமைந்துள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கிம்மல் புற்றுநோய் மையத்தின் பேராசிரியர் யூன்&யங் ஜேங் என்பவர் கல்லீரல் பாதிப்படைந்தவர்களுக்கு சிகிச்சை செய்வதற்கும் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சை பெறுபவர்களுக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More