இரவு வானத்தைக் கண்ணால் நோக்கினால் விண்மீன்கள் வெவ்வேறு நிறங்களில் ஒளிர்வதைக் காண முடிகிறது. விண்மீன்களின் ஒளிச் செறிவின் அளவும் மாறுபடுகின்றது. அவற்றின் நிறத்தில் காணப்படும் மாறுபாட்டை அறிய நிறக் குறிப்பு எண் (Colour Index) பயன்படுத்தப்படுகிறது. இந்நிறக் குறிப்பு எண் சுழி எனில் அவ்வகை விண்மீன்கள் வெள்ளை நிற
விண்மீன்கள் என்றும், நிறக் குறிப்பு எண் சுழியை விட அதிகமாக இருந்தால், அதாவது நேர்மதிப்பைப் பெற்றிருந்தால் அவ்வகை விண்மீனின் நிறம் சிவப்பு நிறப் பகுதயை நோக்கியதாக இருக்கும். உதாரணமாக சைரஸ் (Sirius) என்ற விண்மீன், சுழி நிறக் குறிப்பு எண்ணுடைய வெள்ளை விண்மீனாகும். நமது சூரியனின் நிறக் குறிப்பு எண் 0.81 ஆகும். இது ஒரு மஞ்சள் நிற விண்மீனாகும்.மாறாக அன்ட்ராரஸ், (Antares) 1.5 நிறக் குறிப்பு எண் கொண்ட சிவப்பு விண்மீனாகும். இவ்வாறாக ஒரு விண்மீனின் நிறக் குறிப்பு எண் அறியப்பட்டால், அதிலிருந்து அந்த விண்மீனின் மேற்பரப்பு வெப்பநிலையைக் கணிக்க முடியும். தற்போது நிறமாலை காட்டியின் வழியாக விண்மீன்களை ஆராயும் பொழுது அவற்றின் நிறம், வயது, அளவு, அவை செல்லும் திசை, வேகம், அவற்றில் அடங்கியுள்ள தனிமங்கள் ஆகியவற்றை எளிதில் அறிய முடிகின்றது.
இவ்வாறு நிறமாலை காட்டியைப் பயன்படுத்தி ஏறக்குறைய 5,00,000 விண்மீன்களை ஆய்வு செய்து அவற்றின் நிறமாலை வரிகளைக் கொண்டு ஏழு தொகுப்புகளாகப் பிரித்துள்ளனர். இத்தொகுப்புகளுக்கு நிறமாலைப் பிரிவுகள் என்று பெயர் அவற்றுக்கு ளி,ஙி,கி,தி,நி,ரி மற்றும் ஆ என்று அடையாளக் குறிப்பு இட்டுள்ளனர். இந்நிறமாலைப் பிரிவுகள், விண்மீன்களின் வெப்ப நிலையைப் பொறுத்துப் பிரிக்கப்பட்டவை. ளி பிரிவு விண்மீன்கள் மிகுந்த வெப்பமுடையவை.
அவற்றின் மேற்புற வெப்பநிலை 30,000 டிகிரி சென்டிகிரேடுக்கும் மேல் இருக்கும். வி பிரிவு விண்மீன்களின் மேற்புற வெப்பநிலை 3000 டிகிரி சென்டிகிரேட் அளவு காணப்படும். நமது சூரியனின் மேற்புற வெப்பநிலை சுமார் 6000 டிகிரி சென்டிகிரேட் அளவு காணப்படும். நமது சூரியன் நி பிரிவு விண்மீனாகும். இவ்வாறாக ஙி பிரிவு விண்மீன்களின் மேற்புற வெப்பநிலை சுமார் 20,000 டிகிரி சென்டிகிரேடுக்கு மேலும், கி பிரிவு விண்மீன்களில் சுமார் 16000 டிகிரி சென்டிகிரேடுக்கு மேலும், தி பிரிவு விண்மீன்களில் சுமார் 4000 டிகிரி சென்டிகிரேட் அளவு வெப்பநிலை காணப்படும்.
0 comments:
கருத்துரையிடுக