1860-ம் ஆண்டில் ஜெர்மனியில் பிராஸ்பெர்ட்-ஆப்-மெயின் என்ற இடத்தில் தனியார் பள்ளி ஒன்றில் பிலிப் ரீஸ் என்ற இளைஞர் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.
பிலிப் ரீஸ் மிகவும் ஏழை. ஆசிரியர் பணி மூலம் கிடைத்த ஊதியமோ அரை வயிற்றை நிரப்புவதற்குக் கூட போதுமானதாக இல்லை.
அந்த நிலையிலும் தாம் பணிபுரிந்த பள்ளியின் ஒரு மூலையில் ஆராய்ச்சி சாலை ஒன்றை அமைத்து, பலவிதமான அறிவியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார் ரீஸ்.
ஒலியை மின்சாரத்தின் உதவியுடன் எவ்வாறு வேறு இடத்துக்கு அனுப்புவது என்பதே அப்போது அவருடைய ஆராய்ச்சியின் நோக்கமாக இருந்தது.
ஆசிரியர் ரீஸ், இரண்டு மரக் காதுகளைச் செய்தார். அந்தக் காதுகளில் பல நுட்பமான கருவிகளை அமைத்தார்.
இரண்டு காதுகளையும் தள்ளித் தள்ளி வைத்து, அவற்றை மின் கம்பியால் இணைத்தார். பேட்டரியுடன் மின் கம்பியை இணைத்தார். பின் காதுகளை இயக்கினார். ஒரு காதின் வழியாகப் பேசப்பட்டது, மறுகாதில் மிக இலேசாகக் கேட்டது.
அந்த செயற்கைக் காதுகள்தான் முதன்முதலாக அமைந்த தொலைபேசிக் கருவியாகும்.
0 comments:
கருத்துரையிடுக