வந்து போனவர்கள்

சனி, 17 டிசம்பர், 2011

பாரம் தூக்கும் எந்திரம்!


`கிரேன்களை’ நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். இதை பாரம் தூக்கும் எந்திரம் என்றும் சொல்லலாம். நாரை என்ற பறவையின் தோற்றம் போல் இருப்பதால் இதை `கிரேன்’ என்று அழைத்தனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இம்மாதிரிக் கருவியை போர்களில் பயன்படுத்தினர். எதிரியின் கோட்டை மதில் மேல் உள்ள
பொறிகளைத் தாக்கி அழிக்க இதுபோன்ற அமைப்பு ஒன்றைப் பயன்படுத்தினர்.
இன்றைய கிரேன்கள், பெரும் எடையுள்ள பொருள்களை ஏற்ற, இறக்க, ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நகர்த்திச் செல்லப் பயன்படுத்தப்படுகின்றன. பெரிய பெரிய தொழிற்சாலைகளில், துறைமுகங் களில் இதை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள்.
கிரேனில் பலவகை உண்டு. பொதுவாக, கோபுரம் போல் உயர்ந்து நிற்கும் கிரேன்தான் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதன் அமைப்பு, நீண்டு, உயர்ந்த கோபுரம் போலிருக்கும். அதன் மேல், படுக்கைவாட்டில் இயங்கும் கை போன்ற அமைப்பு. அந்தக் `கை’யின் ஒரு முனையில் பல்வேறு பொருட்களைத் தூக்குவதற்கு வசதியான உபகரணங்கள். அந்த உபகரணங்கள் ஏறவோ, இறங்கவோ ஏற்றபடி, கம்பிக் கயிறுகளால் `விஞ்ச்’ என்ற உருளையுடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த உருளை, ஓர் எந்திரம் மூலம் இயக்கப்படுகிறது. கிரேனின் `கை’யின் மறுமுனையில் தூக்கப்படும் எடையைச் சமநிலைப்படுத்தவே இந்த அமைப்பு.
மிதக்கும் கிரேன்களும் உண்டு. தரை தட்டிப் போன, மூழ்கிப் போன கப்பலை நீருக்கடியில் இருந்து வெளியே கொண்டு வர இவைதான் உதவுகின்றன. இரும்புத் தொழிற்சாலைகளில், பாலம் போன்ற அமைப்புடைய கிரேன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More