செவ்வாய், மே 01, 2012
பொது அறிவு தகவல்
தமிழீழத்தில் அராலியில் 1649 ஆம் ஆண்டில் பிறந்த இராமலிங்க முனிவர் என்பவரே முதன் முதலில் வாக்கியப் பஞ்சாங்கத்தை கணித்து வெளியிட்டவராவர். 16.05.1667 - இல் தமது பதினெட்டாவது அகவையில் இதனை வெளியிட்டார்.
யாழ்ப்பாணத்தில் முதன் முதலில் அச்சடித்து வெளியான நூல் ' முத்தி வழி ' என்பதாகும். சேர்ச் மிஷனைச் சேர்ந்த யோசேப்பு நைற்று என்ற பாதிரியார் 1820 ஆம் ஆண்டையடுத்து இந்நூலை வெளியிட்டார்.
யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களின் பெயர்க் கரணியங்களை ( காரணங்களை ) விளக்கமாக எழுதியவர் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை அவர்கள். அவ் ஊர்ப்பெயர் அகராதி யாழ்ப்பாண வைபவ கௌமுதி ஆகும். அந் நூல் 1918 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழில் சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த சாகிப் எம். சீனிவாசராவ்.
பெண்கள் மாத இதழாக வெளிவந்த முதல் இதழ் ' தமிழ் மகள்' ஆகும். இது 1937 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதன் ஆசிரியராக திருவாட்டி மங்களம்மாள் மாசிலாமணி அவர்கள் இருந்தார்.
'விடுதலைப்புலிகள்' முதலாவது இதழ் ( குரல்- 1) 15.03.1984 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
அப்புக்காத்து ஐசாக் தம்பையாவின் மனைவியான மங்கள நாயகி என்பவரே முதன் முதல் தமிழ் நாவல்களை எழுதிய பெண் எழுத்தாளராவார். 1914 இல் ' நொறுக்குண்ட உதயம்' என்றும் 1926 இல் ' அரியமலர்' என்றும் இரு நாவல்களை எழுதியிருந்தார்.
தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் ' கீதகவசம்'. 1913ஆம் ஆண்டு
Post Comment
தொடர்புடைய பதிவுகள்:
0 comments:
கருத்துரையிடுக