ஆசிரியர் பணிகளுக்கான பரிந்துரைக்கப் பட்டவர்களின் பெயர் பட்டியல் மற்றும் பதிவு மூப்பு விவரங்கள் தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு, ஆசிரியர் தேர்வு வாரியம், தலைவர் அவர்களிடமிருந்து 314 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 48 சிறுபான்மையின பட்டதாரி ஆசிரியர் பணிக்காலியிடங்களுக்கான காலியிட அறிவிக்கை பெறப்பட்டது.
இப்பணிக் காலியிடங்களுக்கு மாநில அளவில் அமைந்த மார்ச் 15-ம் தேதி நிலவரப்படி தகுதியுள்ள வேலைவாப்பக பதிவுதாரர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட பதிவுதாரர்களின் பெயர் பட்டியல், பதிவு மூப்பு விவரங்கள், பாடவாரியாகவும், இனவாரியாகவும் www.tn.gov.in என்கிற தமிழக அரசின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி இணைய தளத்தில் மனுதாரர்கள் தங்களது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பரிந்துரை பதிவு மூப்பு தேதிக்குள் தகுதியுள்ள மனுதாரர்கள் எவரும் விடுபட்டிருப்பின் அவர்கள் தாங்கள் பதிவு செய்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை உரிய ஆதாரத்துடன் 10.04.2012 தேதிக்குள் நேரில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
10.04.2012 தேதிக்குப் பின்னர் தொடர்பு கொள்ளும் மனுதாரர்களின் கோரிக்கை ஏதும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது என தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:
கருத்துரையிடுக