வந்து போனவர்கள்

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

தண்ணீரை வெளியிடும் நட்சத்திரம்

எந்திர துப்பாக்கியிலிருந்து வெளியேறும் குண்டுகளின் வேகத்தைப்போல் 80 மடங்கு வேகத்தில் நீரை சிதற அடிக்கும் நட்சத்திரம் ஒன்றை நெதர்லாந்திலுள்ள லெய்டன் பல்கலை கழக விஞ்ஞானிகள், இன்ஃப்ராரெட் கதிர்களை பயன்படுத்தி கண்டுபிடித்துள்ளனர். பூமியிலிருந்து சுமார் 750 ஒளி ஆண்டுகள் தூரத்தில் அடையாளம்
காணப்பட்டுள்ள இந்த நட்சத்திரத்தின் வயது 1 லட்சம் ஆண்டுகள் என கணக்கிடப்பட்டுள்ளது. அதனை ஒருவிதமான வாயு மண்டலம் சூழ்ந்துள்ளது. இந்த வாயுக்கள் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் அணுக்கள் என தெரியவந்துள்ளது. இந்த ஆக்ஸிஜனும் ஹைட்ரஜனும் ஆயிரக்கணக்கான டிகிரி செல்ஸியஸ் வெப்ப நிலையில் தண்ணீராக மாறுவதாக மேலும் ஆய்வில் கண்டறியபட்டுள்ளது. இந்த தண்ணீர், நட்சத்திரத்தின் துருவங்கள் வழியே வெளியேறும் போது 1 லட்சம் டிகிரி செல்சியஸ் வெப்பத்தை எட்டி வாயு நிலையை அடைகிறது. சுற்றியுள்ள வாயு மண்டலத்தில் மோதி, விரைவில் குளிர்ந்து மீண்டும் திரவ நிலையை அடைகின்றது. அமேசான் நதி 1 வினாடியில் எந்த வேகத்தில் பாய்கிறதோ அதைப்போல 100 மில்லியன் மடங்கு அதி வேகத்தில் தண்ணீரை சிதறியடிக்கிறது இந்த நட்சத்திரம் என்னும் ஆச்சரியமான உண்மையையும் இந்த குழுவினர் கண்டறிந்துள்ளனர். அதாவது, அதன் வேகம் மணிக்கு 2 லட்சம் கி மீ அல்லது ஒரு எந்திர துப்பாக்கியின் குண்டுகள் சீறிப்பாயும் வேகத்தைப்போல் 80 மடங்கு ஆகும்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More