வந்து போனவர்கள்

சனி, 31 டிசம்பர், 2011

கருப்புப் பணப் பட்டியலில் முன்னாள் பிரதமர் பெயர்: ராம் ஜெத்மலானி

அயல் நாட்டு வங்களில் கருப்புப் பணம் வைத்திருப்போர் பட்டியலில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஒருவரின் பெயர் இடம்பெற்றுள்ளது என்று கூறிய முன்னாள் அமைச்சரும், மூத்த வழக்குரைஞருமான ராம் ஜெத்மலானி குற்றஞ்சாற்றியுள்ளார்.
மாநிலங்களவையில் ஊழலை ஒழிக்கும் குறைத்தீர்ப்பு அமைப்பை (லோக்பால்) ஏற்படுத்த வழிவகுக்கும் சட்ட வரைவின் மீது நேற்று இரவு நடந்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசியபோது ராம் ஜெத்மலானி இவ்வாறு கூறியதற்கு காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

“அயல் நாட்டு வங்கியில் இரகசியக் கணக்கு வைத்து அதில் கருப்பு பணத்தைப் போட்டு வைத்திருப்பவர்கள் 14 பேரின் பட்டியலை சுவிட்சர்லாந்து இதழ் ஒன்று வெளியிட்டது. அதில் வெட்கட்கேடான விடயம் என்னவெனில் அப்பட்டியலில் இருந்து 14வது மனிதர் இந்தியாவின் முன்னாள் பிரதமர்” என்று கூறினார்.

ஜெத்மலானி குறிப்பிடுவது தங்களின் முன்னாள் தலைவர் ராஜீவ் காந்தியைத்தான் என்பதை புரிந்துகொண்ட காங்கிரஸ் கட்சியினர், அவர் தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அவர்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பேசிய ஜெத்மலானி, கருப்புப் பணத்தை போட்டு வைத்திருப்போரின் பட்டியலை வெளியிடும் துணிச்சல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு இல்லை என்றும், அடுத்த மக்களவைத் தேர்தலில் அக்கட்சி ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்படும் என்றும் கூறினார்.

மத்திய புலனாய்வுக் கழகத்தை கண்காணிக்கும் பொறுப்பு ஊழல் குறைத் தீர்ப்பு அமைப்பிற்கு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய ஜெத்மலானி, தனது போராட்டத்தின் மூலம் ஊழலுக்கு எதிரான மக்கள் உணர்வையே அண்ணா ஹசாரே வெளிப்படுத்தினார் என்று புகழ்ந்தார்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More