வந்து போனவர்கள்

வெள்ளி, 6 ஜனவரி, 2012

ஏ.இ.இ.ஓ., போட்டித் தேர்வு தள்ளி வைப்பு

சென்னை:வரும் 8ம் தேதி நடக்க இருந்த, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவிகளுக்கான போட்டித் தேர்வு, பிப்., 19ம் தேதிக்கு தள்ளி வைத்து, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.தொடக்க கல்வித் துறையில், 34 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் (ஏ.இ.இ.ஓ.,), போட்டித் தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக, 68 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். போட்டித் தேர்வு, வரும் 8ம் தேதி நடக்க இருந்தது.


இந்நிலையில், மொத்த பணியிடங்களில், மாற்றுத் திறனாளிகளுக்கு 1 சதவீதம் (1 பணியிடம்) ஒதுக்க வேண்டும் என்றும்; அவர்களுக்கான வயது வரம்பை, 10 ஆண்டுகள் தளர்த்தி, விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி, 35 வயதில் இருந்து, 45 வயதிற்குட்பட்டோர் வரை விண்ணப்பிக்க, தேர்வு வாரியம் வழங்கிய கால அவகாசம், இன்றுடன், முடிகிறது. கூடுதலாக பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, தகுதியானவர்களுக்கு, "ஹால் டிக்கெட்' அனுப்ப வேண்டும்.இதற்கு, போதிய நேரம் இல்லாததால், போட்டித் தேர்வை, பிப்., 19ம் தேதிக்கு தள்ளி வைத்து, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று அறிவித்தது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மையங்களிலேயே, தேர்வு நடைபெறும் என்றும், வாரியம் தெரிவித்துள்ளது.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More