ரோமாபுரிப் படை வீரர்கள் தங்கள் கழுத்தைச் சுற்றி ஒரு சிறு துணியை அணிந்தார்கள்.
அது, குளிர் காலத்தில் இதமாக இருக்கும். வெயில் காலத்தில் வியர்வையை உறிஞ்சும்.
காலப்போக்கில் மற்ற படை வீரர்களும் அதைப் பின்பற்றத் தொடங்கினர். பிரெஞ்சுப் புரட்சியின்போது அவரவர் சார்ந்த கட்சியைக் குறிக்கும் விதத்தில் வெவ்வேறு நிறங்களில் `டை’ அணிந்துகொண்டனர்.
குரோஷிய ராணுவத்திடம் இருந்து டையின் அமைப்புகளையும், `க்ரேவட்’ என்ற சொல்லையும் எடுத்துக்கொண்டனர்.பின்னர் இது நாகரிக உடையின் ஆடையாளம் ஆனது. அலுப்பூட்டும் உடைகள் இடையே, வண்ணத்தை அள்ளித் தெளிப்பதாக டைகள் வடிவமைக்கப்பட்டன.
0 comments:
கருத்துரையிடுக