வந்து போனவர்கள்

புதன், 21 டிசம்பர், 2011

நட்சத்திரத்தை விழுங்கிய அதிக சக்தி வாய்ந்த கருந்துளை

விண்வெளியில் அதிக சக்தி வாய்ந்த கருந்துளைகள் உள்ளன. இவை தங்களுக்கருகில் இருக்கும் அனைத்தையும் உள்ளிழுத்து கொள்ளும் ஆற்றல் பெற்றவை. தற்போது அத்தகைய கருந்துளைகளில் ஒன்று நட்சத்திரம் ஒன்றை சிதறடித்து பின் தனக்குள்ளே உள் வாங்கிய அரிய நிகழ்ச்சியை வானியலாளர்கள் முதன் முறையாக கண்டறிந்துள்ளனர்.
பூமியிலிருந்து 4 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் நடந்துள்ள இது போன்ற நிகழ்வு இதற்கு முன்பு கண்டறியப்படாதது. பொதுவாக கருந்துளைகளின் மையம் சூரியனைப்போன்று 100 கோடி மடங்கு அதிக வலிமை கொண்டதாக இருக்கும். தற்போது நடைபெற்ற நிகழ்வில், கருந்துளையானது தன்னிடமிருந்து 3.9 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்த நட்சத்திரத்தை, அதிக சக்தி வாய்ந்த காஸ்மிக் ஜெட் எனப்படும் தனிப்பட்ட சக்தியால் சிதறடித்து பின் தன்னுள் இழுத்து கொண்டுள்ளது. இதனால் ஏற்பட்ட ஒளி வெள்ளம் அதனை படம் பிடித்த நாசாவின் ஸ்விப்ட் தொலைநோக்கிக்கு அடுத்த ஒரு வடருடத்திற்கு தேவையான ஒளியை வழங்குமளவிற்கு பிரமாண்டமாய் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விண்வெளியில் கடந்த மார்ச் மாதத்திலிருந்து எக்ஸ் கதிர்களின் அலைவீச்சு அடிக்கடி நிகழ்ந்து வந்ததையும் ஸ்விப்ட் தொலைநோக்கி அவ்வப்போது நாசாவிற்கு தெரிவித்து வந்தது. அதனை தொடர்ந்து ஆராய்ந்ததில் இந்த அரிய நிகழ்வு தற்போது உலகிற்கு தெரிய வந்துள்ளது. மற்றும் நட்சத்திர மண்டலத்தில் 100 மில்லியன் வருடங்களுக்கு ஒரு முறை இது போன்ற நிகழ்வு நடைபெறும் என பென்சில்வேனியா மாநில பல்கலைகழகம் மற்றும் ஹார்வேர்டு ஸ்மித்சோனியன் வானியல் அமைப்பு ஆகிய குழுவை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More