வந்து போனவர்கள்

புதன், 21 டிசம்பர், 2011

சிம்பன்ஸிகளில் ஆண்களைக் காட்டிலும் பெண்களே புத்திசாலிகள்

பெல்ஜியம் நாட்டில் இரு உயிரியல் பூங்காவில் உள்ள ஆண், பெண் மனிதக்குரங்குகளுக்கிடையே உள்ள திறமைகளைக் கண்டுகொள்ள நடத்தப்பட்ட ஆறு போட்டிகளில் பெண் சிம்பன்ஸிகளே தன் புத்திசாலித்தனத்தை வெளிக்காட்டி வெற்றி பெற்றது. பெண் சிம்பன்ஸிக்கள், போட்டிக்காக சற்று கைக்கு எட்டாமல் சற்று
தொலைவில் வைக்கப்பட்டிருந்த தின்பண்டங்கள், கொட்டைகள் ஆகியவற்றை எடுக்க சின்ன மரக்கிளைகள், குச்சிகள் போன்றவற்றின் துணைகொண்டு அந்த பழங்களையும், கொட்டைகளை லாவகமாக எடுத்ததுடன் அல்லாது, சிறு கற்கள் மூலம் பழக்கொட்டைகளை மிகவும் இயற்கையாக உடைத்துத் தின்றது. ஆண் சிம்பன்ஸிக்கள் தன் மூர்க்கத்தனத்தையும், ஆண் ஆதிக்கத்தன்மையின் மூலமாகத்தான் பெண் சிம்பன்ஸிக்களை வெற்றி கொள்ளும் என்று நினைத்திருந்தனர் போட்டி அமைப்பாளர்கள். ஆனால், அவர்கள் நினைத்ததற்கு மாறாக, ஆண் சிம்பன்ஸிகளோ பெண் சிம்பன்ஸிகளோடு போட்டிகளை தவிர்த்து, இனக்கவர்ச்சி மூலம் வெற்றிகொள்ளும் உத்திகளையே கையாளத்துடித்தது. இது வழக்கமாக ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் என்னும் மனித இயல்புகளை நிரூபிப்பதாகவுள்ளது என்றும், ஆனால், இந்த ஒருசில போட்டிகளின் மூலம் மனித இனங்களின் திறமைகளையும், ஜீன்களின் பண்புகளைப் பற்றியும் இறுதியான முடிவு எட்டிவிடமுடியாது என்று இப்போட்டியை ஏற்பாடு செய்திருந்த ஸ்டீவன் என்பவர் தெரிவித்துள்ளார்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More