2011-ம் ஆண்டு சர்வதேச வேதியியல் ஆண்டு. காலையில் பற்பசையில் பல்துலக்குவது முதல் இரவில் தூங்குவதற்குப் பிளாஸ்டிக் பாயைப் பயன்படுத்துவதுவரை நம் அன்றாட வாழ்வின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் வேதியியல் முக்கிய பங்கு வகிக்கிறது. வேதியியலின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்தவும், நம்மைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளின் பின்னுள்ள வேதியியல் தத்துவத்தைப் புரிந்துகொண்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்வதை ஊக்கப்படுத்தவும் இந்த ஆண்டை சர்வதேச வேதியியல் ஆண்டாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது. ரேடியத்தைக் கண்டுபிடித்த மேரி க்யூரி அம்மையாருக்கு வேதியியல் துறையில் நோபல் பரிசு கிடைத்து 100 ஆண்டுகள் ஆவதையொட்டி இந்த சர்வதேச வேதியியல் ஆண்டு அமைவதால் அறிவியல் வளர்ச்சியில்
பெண்களின் முக்கியத்துவத்தை உணரவும், உணர்த்தவும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நமக்கும், வேதியியலுக்கும் உள்ள உறவு நம் மூச்சுக்காற்றிலேயே கலந்துள்ளது. காற்றிலுள்ள ஆக்சிஜன் நாம் உயிர் வாழக் காரணம். எனினும், தண்ணீரில் கரைந்திருக்கும் ஆக்சிஜனைக் கொண்டு மீன்கள் சுவாசிக்கும்போது நம்மால் தண்ணீரில் சுவாசிக்க முடிவதில்லை. இன்று, வேதியியல் வளர்ச்சியால் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் கடலின் அடிஆழத்தையும், இமயமலை சிகரங்களையும், காற்று மண்டலமே இல்லாத விண்வெளி மற்றும் நிலவையும் எட்டிப்பிடித்திருக்கிறோம். இவ்வாறு தன்னைச் சுற்றியுள்ள வேதியியலைப் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டதே, மனித இனம் இந்த அளவுக்கு வளர்ச்சியடையக் காரணமாகும்.
நாம் சுவாசிக்கும் காற்று மட்டுமன்றி, குடிக்கும் தண்ணீரும் ஹைட்ரஜன், ஆக்சிஜன் மூலக்கூறுகள் இணைந்த வேதிப் பொருளாகும். இதேபோல் நாம் உண்ணும் உணவுப் பொருள்களும், பயன்படுத்தும் மருந்துப்பொருள்களும் வேதிப்பொருள்களால் ஆனவை ஆகும். வேதியியலுக்கும், நமக்குமான உறவு கருவிலிருக்கும்போதே தொடங்கி விடுகிறது, கருவிலிருக்கும் குழந்தை ஆரோக்கியமாக வளர கால்சியம், இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமில மாத்திரைகளைத் தருகிறார் மருத்துவர். கால்சியம், எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. இரும்புச்சத்து, ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியைப் பெருக்கி ரத்தசோகை வராமல் காக்கிறது. ஃபோலிக் அமிலம், புதிய ஆரோக்கியமான செல்களின் உற்பத்திக்கு உதவுகிறது. கருவுற்ற சில தாய்மார்கள் சத்து மாத்திரை சாப்பிட்டால் கருவிலிருக்கும் குழந்தை குண்டாகி, பிரசவம் சிரமமாகிவிடும் என தவறாக நினைத்து மாத்திரை சாப்பிடாமல் விட்டுவிடுகிறார்கள். கருவிலிருக்கும்போதும், வளரும் பருவத்திலும் குழந்தைகளுக்கு இந்த சத்துகள் மிகவும் அவசியம். உண்மையில் இந்த சத்துகள் குறைந்தால் குழந்தையின் உடல் வளர்ச்சியும், மன வளர்ச்சியும் பாதிக்கப்படலாம். இதுகுறித்து தாய்மார்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகும். வளர்ந்த நாடுகளில் குழந்தைகள் விரும்பி உண்ணும் சாக்லெட் மற்றும் பிஸ்கட்டுகளில் இந்த சத்துகளைக் குறிப்பிட்ட அளவில் கலந்தே தயாரிக்கிறார்கள். அதேபோல கருவுறும் வயதிலுள்ள அனைத்துப் பெண்களுக்கும் ஃபோலிக் அமில மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. நமது நாட்டிலும் இதுகுறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். உடல்நலம் குன்றும்போது நம் உயிர்காக்கும் அனைத்தும் வேதியியலின் நன்கொடையே ஆகும். சாதாரண தலைவலி, காய்ச்சலைக் குணமாக்கும் பாரசிட்டமால் மாத்திரைகள் முதல் கொடிய பாம்பு கடியிலிருந்து நம் உயிரைக் காப்பாற்றும் விஷமுறிவு மருந்து வரை வேதியியல் மருந்துகள் உயிர்காக்கும் மருந்துகளாக உதவுகின்றன. அதேநேரம், இவற்றை நாம் கவனமாகப் பயன்படுத்தாவிடில் உயிர் குடிக்கும் எமனாகவும் மாறிவிடக்கூடும். எடுத்துக்காட்டாக, பாம்பு கடிக்குக் கொடுக்கப்படும் விஷமுறிவு மருந்து சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தாக முடியலாம். எனவே, மருத்துவரின் ஆலோசனையின்றி நாமே மருந்துகள் வாங்கி உட்கொள்வது ஆபத்தானது. அதேபோல பாம்பு கடிக்கு ஆளானவரை எந்த வகைப் பாம்பு கடித்தது என்று மருத்துவரிடம் தெரிவிப்பது மிகவும் அவசியமாகும். ஏனெனில், நல்லபாம்பின் விஷம் நரம்புமண்டலத்தை செயலிழக்கச்செய்யும் புரதத்தாலானது. விரியன் பாம்பின் விஷமோ ரத்த சிவப்பணுக்களை அழித்து திசுக்களைச் செயலிழக்கச்செய்யும் புரதத்தாலானது. எனவே அவற்றுக்குக் கொடுக்கப்படும் விஷமுறிவு மருந்துகளும் வெவ்வேறு வகையானவைகளாகும். 2011 – சர்வதேச வேதியியல் ஆண்டின் மையக்கரு “”வேதியியல் – நம் வாழ்வு, நம் எதிர்காலம்” (இட்ங்ம்ண்ள்ற்ழ்ஹ் – ஞன்ழ் ப்ண்ச்ங், ஞன்ழ் ச்ன்ற்ன்ழ்ங்) என்பதாகும். ஆதிகாலம் தொட்டே மனிதன் பயன்படுத்தத் தொடங்கிய செம்பு, இரும்பு போன்ற உலோகங்களிலிருந்து இன்று நம் வாழ்வை ஆக்கிரமித்துள்ள பாலித்தீன் வரை மனித இனத்தின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் வேதியியலின் பங்கு முக்கியமானதாகும். சிந்தித்துப் பார்த்தோமானால் நாம் பயன்படுத்தும் எந்தப் பொருளையும் வேதியியலின் துணையின்றி உருவாக்கியிருக்க முடியாது. நமது எதிர்கால முன்னேற்றமும் வேதியியலைச் சார்ந்தே இருக்கும். எனவே பொதுமக்களிடம் வேதியியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், இளம்பருவத்தினரிடம் வேதியியலின் முக்கியத்துவத்தை உணர்த்தி அவர்களை ஆய்வுகள் செய்யத் தூண்டுவதும், நம் வாழ்விலும், வளர்ச்சியிலும் வேதியியல் ஆற்றியுள்ள பங்கினை அனைவருக்கும் உணர்த்துவதும் இந்த சர்வதேச வேதியியல் ஆண்டில் நாம் செய்ய வேண்டிய பணிகளாகும். வேதியியல் என்ற ஒளிவிளக்கை அழிவுக்காகப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு ஆக்கத்துக்காக மட்டுமே பயன்படுத்துவோம்.

0 comments:
கருத்துரையிடுக