அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் மகேலா என்பவர் தலைமையில் சுனாமி தாக்குதல் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பல்வேறு முடிவுகள் தெரிய வந்தன. கடந்த மார்ச் மாதம் ஜப்பான் நாட்டில் சுனாமி பேரலைகள்
அதி பயங்கர தாக்குதல்களை நடத்தின. சுனாமி வருவதற்கு முன்பு பூமியிலிருந்து 250 கி.மீ. உயரத்தில் காற்று மண்டலத்தில் சில மாறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. வழக்கமாக சூரிய கதிர்கள் வாயு மண்டலத்தில் காற்று மூலக்கூறுகளை ஊடுருவி செல்லும் பொழுது உள்ள காற்றின் அடர்த்தியும், சுனாமியின் போது காற்றின் அடர்த்தியில் ஏற்படும் மாற்றமும் கண்டறியப்பட்டன. இதனை அறிவியலாளர்கள் வரைபடம் வழியே விளக்கியுள்ளனர். வரைபடத்திலுள்ள சிவப்பு நிற கோடுகள் சுனாமி தாக்குதலை குறிக்கிறது. எனவே, சுனாமி வருவதற்கு முன்பே காற்றில் ஏற்படும் இத்தகைய மாற்றத்தை கருத்தில் கொண்டு அதற்கேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments:
கருத்துரையிடுக