வந்து போனவர்கள்

சனி, 24 டிசம்பர், 2011

துணைக்கோள் இல்லாவிட்டாலும் கிரகங்களுக்கு பாதிப்பில்லை

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், பூமி அதன் அச்சில் உள்ள நிலைப்பாடு குறித்து இதாஹோ பல்கலைகழகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், பூமிக்கு துணைக்கோள் இல்லாத நிலையிலும் உயிரினங்களின் வாழ்வாதாரம் பாதிப்படைவதில்லை என தெரிய வந்துள்ளது. மேலும் மற்ற கோள்களுக்கும் துணைக்கோள் என்பது அவசியமில்லை என்றும் அதனால்
கோள்களின் நிலைத்தன்மையில் பாதிப்பு ஏற்படாது என்றும் அது தெரிவிக்கின்றது. இதுவரையில், துணைக்கோள் இல்லையெனில் பூமி தன் அச்சிலிருந்து சிறிது விலக நேரிடும் என்றும், அதனால் சூரிய ஒளி துருவ பகுதிகளில் விழுந்து பருவகால நிலைகளில் பெரிய மாற்றம் நிகழும் எனவும் எனவே உயிரினங்களின் வாழ்க்கை முறை பாதிக்கப்படும் என்றும் அறிவியலாளர்கள் நம்பி வந்துள்ளனர். தற்போது, இந்த ஆராய்ச்சி முடிவால் பூமி அதனுடைய துணைக்கோள் இன்றியும் தன் அச்சில் சீராக இயங்கும் என தெரிய வந்துள்ளது.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More