வந்து போனவர்கள்

nobel prize லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
nobel prize லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 13 ஜூலை, 2012

நோபல் பரிசு உருவான கதை உங்களுக்கு தெரியுமா!


ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு துறைக்கும் உயரிய விருது அல்லது அங்கீகாரம் என்று ஒன்று இருக்கும். தேசத்திற்கு தேசம் அது மாறுபடும். ஆனால் ஒட்டுமொத்த உலகுக்குமே ஓர் உயரிய விருது அல்லது அங்கீகாரம் பொருந்துமென்றால்
அது நோபல் பரிசாகத்தான் இருக்க முடியும். நோபல் பரிசு ஒன்றுதான் தேச மொழி எல்லைகளை கடந்து ஆறு வெவ்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பினை செய்தவர்களை ஆண்டுதோறும் கவுரவுக்கிறது. நோபல் பரிசை மிஞ்சும் அளவுக்கு வேறு எந்த பரிசும் கிடையாது என்று சொல்லுமளவுக்கு கடந்த 100 ஆண்டுகளில் அது நிலைபெற்றிருக்கிறது.

இன்று பலரை ஆக்க வழியில் சிந்திக்க தூண்டும் அந்த நோபல் பரிசு உருவானதற்கு ஓர் அழிவுசக்தி காரணமாக இருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா? அழிவுசக்தியை உருவாக்கி அதனால் மனம் நொந்துபோன ஒரு விஞ்ஞானி தனக்கு ஏற்படப்போகும் களங்கத்தை துடைத்துக்கொள்ள உருவாக்கியதுதான் நோபல் பரிசு. அந்த அழிவுசக்தி டைனமைட் எனப்படும் வெடிமருந்து, அந்த விஞ்ஞானி ஆல்ஃப்ரெட் நோபல்.

1833 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ந்தேதி ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்கொமில் பிறந்தார் ஆல்ஃப்ரெட் நோபல், நோபலின் தந்தை மேனுவல் நோபல் ஒரு புகழ்பெற்ற பொறியாளராகவும் கண்டுபிடிப்பாளராகவும் இருந்தவர் கட்டடங்கள் பாலங்கள் கட்டுவதிலும் வெவ்வேறு வழிகளை கற்களை வெடித்து உடைப்பதிலும் அவர் வல்லவர். ஆனால் ஆல்பர்ட் நோபல் பிறந்த சமயம் தந்தையின் நிறுவனம் நொடித்துப்போனது. பின்னர் ரஷ்யாவுக்கு சென்று தொழில் செய்து பணம் சேர்த்தார் தந்தை, தனது குடும்பத்தையும் அங்கு அழைத்துக்கொண்டார். தனது நான்கு பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வி கிடைக்க வேண்டுமென்பதற்காக அவர்களுக்கு தனியாக பாடங்கள் சொல்லிக்கொடுக்க ஏற்பாடு செய்தார்.

ஆல்ஃப்ரெட் நோபலுக்கு 17 வயதானபோது ஸ்விடிஸ், ரஷ்யன், ப்ரெஞ்சு, ஜெர்மன் மற்றும் ஆங்கிலத்தில் எழுத படிக்க தெரியும். நோபலை வேதியல் பொறியாளராக ஆக்க வேண்டும் என விரும்பிய தந்தை அவரை மேல்படிப்புக்காக பாரிஸ்க்கு அனுப்பி வைத்தார் பாரிஸில் நோபலுடன் படித்த அஸ்ட்ரானியோ ஸ்ப்ராரோ என்ற இத்தாலியர் நைட்ரோ கிளிசரின் என்ற ரசாயனத்தை கண்டுபிடித்திருந்தார். அது வெடிக்கும் தன்மை கொண்டதாலும் ஆபத்தானது என்பதாலும் அதை அப்படியே விட்டுவிட்டார். ஆனால் நோபல் அதைப்பற்றி மேலும் ஆராய விரும்பினார். படிப்பு முடிந்து ரஷ்யா திரும்பியதும் தன் தந்தையுடன் இணைந்து எப்படி நைட்ரோ கிளிசரினை கட்டுமான துறைக்கு பயன்படுத்தலாம் என ஆராயத் தொடங்கினார்.

கிரைனியன் போர் காரணமாக அவர்களது தொழில் மீண்டும் நொடித்துப்போனது எனவே அவர்கள் மீண்டும் ஸ்விடனுக்கு திரும்பினர். ஸ்வீடன் வந்த பிறகு நைட்ரோ கிளிசரினை வெடி மருந்தாக உருவாக்குவதில் ஆராய்ட்சி செய்தார் நோபல் அது அபாயமான பொருள் என்று தெரிந்தும் அதனை பாதுகாப்பானதாக ஆக்கினால் நல்ல காரியங்களுக்காக பயன்படுத்த முடியும் என்று நம்பினார். ஆனால் அதற்கு அவர் செலுத்திய விலை அதிகமாக இருந்தது. அவரது சோதனைகளின் பொது சிலமுறை பயங்கர வெடிப்புகள் ஏற்பட்டு அவரது தொழிற்சாலைகள் தரைமட்டமாயின. பணியாளர்கள் சிலர் உயிரழந்தனர். அவர்களுள் ஒருவர் நோபலின் இளைய சகோதரர் இமில். உயிர் பலிக்கு பிறகும் ஆராட்சிகளை தொடர்ந்தார் நோபல். ஆனால் ஸ்வீடன் அரசாங்கம் அதற்கு தடை விதித்தது.

மனம் தளராத நோபல் நைட்ரோ கிளிசரினுடன் பல்வேறு பொருட்களை கலந்து சோதனை செய்து பார்த்தார். கிஸல்கள் என்ற ஒரு வகை களிமண்ணுடன் சேர்த்து பிசைந்தால் பாதுகாப்பான வெடிமருந்து கிடைக்கும் என்பதனை கண்டுபிடித்தார். அந்த தனது கண்டுபிடிப்புக்கு டைனமைட் என்று பெயரிட்டார்.டைனமைட் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1866. கிரேக்க மொழியில் டைனமைட் என்றால் சக்தி என்று பொருள். அவரது அந்த கண்டுபிடிப்பு பல தொழில்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. உதாரணத்திற்கு காடு மேடுகளை அழிக்கவும், நிலத்தை சமப்படுத்தவும், மலைகளை குடைந்து பாதைகள் அமைக்கவும், பழைய கட்டடங்களை சில நிமிடங்கில் தகர்க்கவும் முடிந்தது.

ஆல்ப்ஸ் மலையை குடைந்து செயின்ட் கடாட் குகைப்பாதை அமைக்க நோபலின் டைனமைட்தான் பேருதவி புரிந்தது. அவரது கண்டுபிடிப்புக்கு அமோக வரவேற்பு கிடைத்ததால் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் அவர் 90 டைனமைட் தொழிற்சாலைகளை உருவாக்கினார் பெருமளவில் செல்வம் சேரத்தொடங்கியது. ஆனால் ஆக்கசக்தியாக தான் உருவாக்கியதை அழிவுசக்தியாக சிலர் பயன்படுத்தத் தொடங்கியதை கண்டு மனம் பதைத்தார் நோபல். 1888 ஆம் ஆண்டு நோபலின் சகோதரர் லுட்விக் காலமானார். ஆனால் நோபல்தான் இறந்துவிட்டார் என நினைத்த பத்திரிகைகள் அழிவுசக்தியை உருவாக்கி கோடிஸ்வரரான ஆல்ஃப்ரெட் நோபல் காலமானார் என்று செய்தி வெளியிட்டன. அதனை படித்து அதிர்ந்து போன நோபல் தனது உண்மையான மரணத்துக்குபின் உலகம் தன்னை பழிக்கப்போகிறது என்று கலங்கினார்.

அந்த களங்கத்தை அகற்ற ஒரே வழி தனது செல்வத்தை எல்லாம் உலக நன்மைக்காகவும் மனுகுல மேன்மைக்காகவும் பாடுபடுபவர்களுக்கு பரிசாக வழங்குவதுதான் என்று முடிவு செய்தார். உலகம் முழுவதிலும் இருந்த 90 க்கும் மேற்பட்ட டைனமைட் தொழிற்சாலைகளிலிருந்தும், ரஷ்யாவில் எண்ணெய் கிணறு அபிவிருத்தியிலிருந்தும் கிடைத்த பெரும் செல்வத்தைகொண்டு ஓர் அறக்கட்டளையை நிறுவினார். 1890 ஆம் ஆண்டு தான் எழுதிய உயிலில் 9 மில்லியன் டாலரை நோபல் அறக்கட்டளைக்கு எழுதி வைத்தார். அந்தத்தொகையிலிருந்து கிடைக்கும் வட்டியைக்கொண்டு ஆண்டுதோறும் 5 வெவ்வேறு மிகச்சிறந்த மனுகுல சேவை ஆற்றுவோருக்கு பரிசு வழங்க முடிவு செய்தார். இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்த ஆல்ஃப்ரெட் நோபல் 1896 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ந்தேதி தனது 63 ஆவது வயதில் இத்தாலியில் காலமானார்.

ஆல்ஃப்ரெட் நோபல் மறைந்த ஐந்து ஆண்டுகளுக்குப்பிறகு அதாவது 1901 ஆம் ஆண்டு முதல் அவர் விருப்பப்படியே நோபல் பரிசுகள் வழங்கப்பட தொடங்கின. ஐந்து துறைகளுக்கு கொடுக்கப்பட்டு வந்த நோபல் பரிசு 1969 ஆண்டிலிருந்து பொருளாதாரம் என்ற புதிய பிரிவையும் சேர்த்துக்கொண்டது. இன்றுவரை 770 பேர் நோபல் பரிசை வென்றிருக்கின்றனர். தன்னை அழிவுசக்தியை கண்டுபிடித்த நோபல் என்றில்லாமல் அறிவாளிகளை கவுரவிக்கும் நோபல் என்று உலகம் நினைவில் வைத்திருக்க வேண்டும் என விரும்பினார் ஆல்ஃப்ரெட் நோபல். அவரது எண்ணம் வீண்போகவில்லை

ஆண்டுதோறும் நோபல் பரிசின் பெயர் உச்சரிக்கப்படும் போதேல்லாம் அந்த உன்னத மனிதனைத்தான் உலகம் நினைவு கூறுகிறது. உண்மையில் அவர் அழிவுசக்தியை கண்டுபிடிக்கவில்லை.ஆக்கசக்தியாக நோபல் கண்டுபிடித்ததை உலகம்தான் அழிவுசக்திக்கு பயன்படுத்தியது இன்றும் பயன்படுத்துகிறது. இருப்பினும் டைனமைட்டை கண்டுபிடித்ததிலும் பின்னர் நோபல் பரிசை அறிமுகம் செய்ததிலும் ஆல்ஃப்ரெட் நோபலின் நோக்கமும் சிந்தனையும் உயரியதாக இருந்தன. அதனால்தான் இன்றும் அவரது பெயர் வானம் வரை உயர்ந்து நிற்கிறது.

வியாழன், 12 ஜூலை, 2012

நோபல் பரிசு பெற்ற இந்தியர்களின் பட்டியல்


நோபல் பரிசு ஆண்டு தோறும் இலக்கியம், உலக அமைதி, மற்றும் அறிவியல் தொழில்நுட்பங்க்க்ளில் பெரும் பங்காற்றியவர்களுக்கு 1901 ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. இவ்வகையில் இது வரையில் 13 இந்தியக் குடியுரிமை உள்ளவர்கள் அல்ல்து இந்தியாவில் பிறந்தவர்கள் பெற்றுள்ளார்கள்.

ரவீந்திர நாத் தாகூர் - இலக்கியம் - 1913
சர்.சி.வி.ராமன் - இயற்பியல் - 1930
அன்னை தெரேசா - அமைதி - 1979
சுப்பிரமணியன் சந்திரசேகர் - இயற்பியல் - 1983 (அமெரிக்க குடியுரிமை பெற்றவர்)
அமர்தியா சென் - பொருளாதாரம் - 1998
ராஜேந்தர் பச்செளரி (IPCC) - அமைதி - 2007
வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் - வேதியியல் - 2009 (அமெரிக்க குடியுரிமை பெற்றவர்)

இந்தியா சார்பாக நோபல் பரிசு பெற்ற பெருமைக்குரியவர்கள்

1) ரவீந்திரநாத் தாகூர்
இந்தியா வின் பிரபல எழுத்தாளராகவும், கவிஞராகவும் விளங்கிய குருதேவ் என பிரபல்யமாக அறியப்படுகின்ற ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் கீதாஞ்சலி என்ற தனது கவிதைத் தொகுப்புக்காக 1913ம் ஆண்டு இலக்கியத் துறைக்கான நோபல் பரிசினை பெற்றுக்கொண்டார். ரவீந்திரநாத் தாகூர் அவர்களே நோபல் பரிசினை பெற்றுக்கொண்ட முதல் ஆசிய நாட்டவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார்.

இந்தியா மற்றும் பங்களாதேஸ் நாடுகளின் தேசிய கீதத்தினை இயற்றிய பெருமைக்குரியவரும் வங்கக்கவி ரவீந்திரநாத் தாகூர் ஆவார்.

2) சந்திரசேகர வெங்கட் ராமன்

தமிழ் நாடு திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட ராமன் மெட்ராஸ் அரசாங்க பாடசாலையில் கல்வி கற்றதுடன்,கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பெளதிகவியல் பேராசிரியராகவும் பணியாற்றினார்.சேர் C.V. ராமன் 1930ம் ஆண்டு பெளதிகவியல் துறைக்கான நோபல் பரிசினை பெற்றுக்கொண்டார். ஒளித்துறையில் முக்கியமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டமைக்காக பேராசிரியர் ராமனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவரின் கண்டுபிடிப்பானது “ராமன் விளைவு" என அழைக்கப்படுகின்றது.
நோபல் பரிசினை பெற்றுக்கொண்ட முதல் தமிழர் என்ற பெருமை சேர் C.V. ராமன் அவர்களைச் சாரும்.

3) ஹர்கோவிந்த் கொரானா

டாக்டர் ஹர்கோவிந்த் பஞ்சாப், ராய்ப்பூரில் (தற்போதைய பாகிஸ்தான்) பிறந்தார். இரசாயனவியல் கலாநிதிப் படிப்புக்காக அமெரிக்கா சென்ற ஹர்கோவிந்த் அமெரிக்காவில் குடியுரிமை பெற்றுக்கொண்டார்.
1968ம் ஆண்டு மருத்துவவியல் துறைக்கான நோபல் பரிசினை பெற்றுக்கொண்டார். மனித நிறமூர்த்த குறியீடுகள் தொடர்பான ஆராய்ச்சிக்காக டாக்டர் ஹர்கோவிந்த் நோபல் பரிசு பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

4) அன்னை திரேசா

அல்பேனி யாவை பிறப்பிடமாகக் கொண்ட அன்னை திரேசா கிறிஸ்தவ கன்னியாஸ்திரியாக 1929ம் ஆண்டு இந்தியாவை வந்தடைந்து தனது முதல் ஆசிரியப் பணியை கல்கத்தாவில் ஆரம்பித்தார். அவரது 20வருட கல்கத்தா ஆசிரியப் பணி அவரின் வாழ்க்கையை மாற்றியமைத்தது. இந்தியாவின் வறுமைக்குள் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். 1948ல் இந்திய குடியுரிமையை பெற்றுக்கொண்ட அன்னை,இந்தியா முழுவதும் திருச்சபையிலான் தொண்டு நிறுவனங்களை ஆரம்பித்து தொண்டாற்றினார். அன்னையின் சேவையினை உணர்ந்த நோபல் குழு 1979ம் ஆண்டுக்கான சமாதான நோபல் பரிசினை வழங்கியது. முதலில் அதை மறுத்த அன்னை ஏழைகளில் ஏழைகளுக்காக அதை ஏற்றுக்கொள்வதாகக் கூறி ஏற்றுக்கொண்டார்.

5) சுப்பிரமணியன் சந்திரசேகர்

மெட்ராஸ் அரசாங்க பாடசாலையில் கல்வி கற்ற டாக்டர் சந்திரசேகர் பின்னர் தனது வேலைகளுக்காக அமெரிக்கா சென்றதுடன் அங்கே தங்கி ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
டாக்டர் சந்திரசேகர் 1983ம் ஆண்டு வானவியல் தொடர்பான தன்னுடைய ஆய்வுக்காக பெளதிகவியல் துறைக்கான நோபல் பரிசினை பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வானவியல் தொடர்பான ஏராளமான நூல்களையும் எழுதியுள்ளார்.

டாக்டர் சந்திரசேகர் , சேர் C.V. ராமனுடைய உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

6) அமெர்த்தியா சென்

பேராசிரியர் அமெர்த்தியா சென் பொருளாதார நோபல் பரிசினை பெற்றுக்கொண்ட முதல் ஆசிய நாட்டவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார். பேராசிரியர் அமெர்த்தியா சென் சிறந்த விரிவுரையாளருமாவார். பொருளாதாரக் கொள்கைகள்-வறுமை, ஜனநாயகம்,அபிவிருத்தி,சமூக நலன் தொடர்பான பகுதியில் சிறந்த முறையில் பணிகளை மேற்கொண்டமைக்காக பேராசிரியர் அமெர்த்தியா சென் 1998ம் ஆண்டு பொருளாதார துறைக்கான நோபல் பரிசினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

7) வெங்கட் ராமன் இராமகிருஸ்ணன்

1952 ம் ஆண்டு தமிழகத்திலுள்ள பிறந்த இவர் அமெரிக்காவின் ஒகியோ பல்கலைக்கழகத்தில் 1976ம் ஆண்டு பெளதிகவியலில் டாக்டர் பட்டம் பெற்றார். 1982ல் அமெரிக்க குடியுரிமையப் பெற்றுக் கொண்ட இவர் கேம்பிரிட்ஜிலுள்ள எம்.ஆர்.சி ஆய்வகத்தில் விஞ்ஞானியாக கடமையாற்றுகின்றார்.

மரபணுக் குறியீடுகளில் றைபோசோம்களின் பங்கு குறித்த இவரின் ஆராய்ச்சிக்காக 2009ம் ஆண்டு இரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசினை பெற்றுக்கொண்டார்.

நோபல் பரிசினை பெறும் 3வது தமிழர் டாக்டர் இராமகிருஸ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 10 ஜூலை, 2012

TNPSC - நோபல் பரிசு பெற்ற பெண்கள்


வேதியியல்
1911: மேரி க்யூரி
1935: ஐரீன் ஜுலியட்-க்யூரி (Irène Joliot-Curie)
1964: டோரதி க்ரெளஃபுட் ஹட்ஜ்கின் (Dorothy Crowfoot Hodgkin)
2009: அடா யோனத்து (Ada E.Yonath)

இயற்பியல்
1903: மேரி க்யூரி
1963: மாரியா கெளபிரெட் மயர் (Maria Goeppert Mayer)
மருத்துவம் (Physiology)
1947: கெர்டி கோரி (Gerty Cori)
1977: ரோசலின் சுஸ்மன் யாலோ ((Rosalyn Sussman Yalow)
1983: பார்பரா மெக்லின்டாக் (Barbara McClintock)
1986: ரீட்டா லெவி-மோன்டால்கினி (Rita Levi-Montalcini)
1988: கெர்ட்ரூட் எலியன் (Gertrude Elion)
1995: க்ரிஸ்டியான் நுஸ்லீன்-வோல்காட் (Christiane Nüsslein-Volhard)
2004: லிண்டா பி. பக் (Linda B. Buck)
2008: பிரான்சுவாசு பாரி சினோசி [1] (Françoise Barré-Sinoussi)
2009: எலிசபத் பிளாக்பர்னு (Elizabeth H. Blackburn)
2009: கரோல் கிரைடர் (Carol W. Greider)
இலக்கியம்
1909: செல்மா லாங்கர்லெளஃப் (Selma Lagerlöf)
1926: கிராசியா டெலேடா (Grazia Deledda)
1928: சிக்ரித் உந்செட் (Sigrid Undset)
1938: பெர்ல் பக் (Pearl Buck)
1945: கேப்ரியெலா மிஸ்திரெல் (Gabriela Mistral)
1966: நெலி ஷெக்ஸ் (Nelly Sachs)
1991: நடீன் கார்டிமர் (Nadine Gordimer)
1993: டானி மாரிஸன் (Toni Morrison)
1996: விஸ்லவா க்ஷிம்போர்ஸ்கா (Wislawa Szymborska)
2004: எல்ஃபிரெட் ஜெலினெக் (Elfriede Jelinek)
2007: டோரிசு லெசிங்கு (Doris Lessing)
2009: எர்ட்டா முலர் [2] (Herta Müller)
அமைதி
1905: பெர்தா வாண் ஸட்னர் (Bertha von Suttner)
1931: ஜேன் ஆடம்ஸ் (Jane Addams)
1946: எமிலி க்ரீன் பால்ச் (Emily Greene Balch)
1976: பெட்டி வில்லியம்ஸ் (Betty Williams)
1976: மிரைட் காரிகன் (Mairead Corrigan)
1979: அன்னை தெரேசா
1982: ஆல்வா ம்ருதெல் (Alva Myrdal)
1991: ஆங் சாங் சூ கி (Aung San Suu Kyi)
1992: ரொகொஃபெர்தா மென்ஷு (Rigoberta Menchú)
1997: ஜோடி வில்லியம்ஸ் (Jody Williams)
2003: ஷிரின் எபாடி (Shirin Ebadi)
2004: வங்காரி மாதாய் (Wangari Maathai)
பொருளாதாரம்
2009: எலினர் ஓசுடிரோம் (Elinor Ostrom0

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More