வந்து போனவர்கள்

புதன், 11 ஜூலை, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த தயார் நிலையில் TRB!


ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டதாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழகம் முழுவதும் 1,027 மையங்களில் வியாழக்கிழமை (ஜூலை 12) நடைபெறுகிறது. மொத்தம் 6 லட்சத்து 56 ஆயிரம் பேர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். இந்தத் தேர்வுக்கான வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் திங்கள்கிழமை சென்று
சேர்ந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தங்களுக்கு ஹால் டிக்கெட் கிடைக்கவில்லை என்று ஏராளமானோர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, 6 அதிகாரிகள் தமிழகம் முழுவதும் அனைத்து கல்வி மாவட்டங்களுக்கும் ஆய்வுக்காக அனுப்பப்பட்டனர். இந்த ஆய்வின்போது 340 பேர் தேர்வு எழுத தகுதியானவர்கள் என்று கண்டறியப்பட்டு அவர்களுக்கு ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டது.
 வழக்கமாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வு எழுத 3 மணி நேரம் ஒதுக்கப்படும். ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு முதல் தாள், இரண்டாம் தாளுக்கு தலா ஒன்றரை மணி நேரம் மட்டுமே ஒதுக்கப்படுகிறது.
 இந்த நேரத்திற்குள் மாணவர்கள் 150 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும் என்பதால், ஒரு கேள்விக்கு 35 விநாடிகள் மட்டுமே நேரம் இருக்கும். கேள்விகளை விரைவாகப் புரிந்துகொள்பவர்கள் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வாய்ப்புள்ளதாக கல்வித் துறையினர் தெரிவித்தனர்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More