நோபல் பரிசு வென்ற அமெரிக்க வாழ் இந்தியரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு சர் பட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் வழங்கும் இப்பட்டம் மிக உயரிய கெளரவமாகக் கருதப்படுகிறது. முன்னதாக 2009-ம் ஆண்டில் ராமகிருஷ்ணன், வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றார். மாலிகுலர் பயாலஜி' துறையில் அவரது பணிகளைப் பாராட்டி இப்பரிசு வழங்கப்பட்டது. இப்போதும் அதே பணிகளைப் பாராட்டி சர் பட்டம் வழங்கப்படுவதாக
அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு சர் பட்டம் கிடைப்பது மிகப்பெரிய கெளரவமாகக் கருதப்படுகிறது.
0 comments:
கருத்துரையிடுக