அமெரிக்க ராணுவம் கடந்த 1950ல் எதிரிகளின் இலக்கை தாக்குவதற்கு பலம் வாய்ந்த பி-52 என்ற போயிங் ரக விமானத்தை பயன்படுத்தி வந்தது. இந்நிலையில் தனது அணு ஆயுத பலத்தை பெருக்கும் வகையில் உயரத்தில் பறந்து சென்று அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறன் வாய்ந்த விமானங்களை உருவாக்க முடிவு செய்தது.
இதற்காக உருவாக்கப்பட்டது தான் உலகின் முதல் அணு ஆயுத விமானம் என கருதப்படும் எக்ஸ்பி&70அ என்ற அதி நவீன விமானம் ஆகும். எதிரி விமானங்களின் தாக்குதலில் இருந்து எளிதில் தப்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த விமானம் சுமார் 70,000 அடி உயரத்தில் பறக்கும் திறன் வாய்ந்தது. 1950&ஆம் ஆண்டு உருவாக்கப்படும்போது இது பிரபலமாகவில்லை. ஆனால் 80 மற்றும் 90களில் பலரது வீடுகளில் இந்த விமானத்தின் மாதிரி இடம்பெற தவறவில்லை. விமானத்தின் பாகங்கள் துருபிடிக்காத உலோக கலவையால் உருவாக்கப்பட்டன. அதிக வெப்பத்தை வெளியிடும் இந்த சூப்பர்சோனிக் விமானத்தின் சில பாகங்கள் ரெனி 41 என்ற உலோக கலவையை கொண்டும் உருவாக்கப்பட்டது. எனினும் தற்காலத்தில் ஏவுகணைகளை தாங்கி செல்லும் ராக்கெட் வரவால் இத்தகைய விமானங்களின் பயன்பாடு முற்றிலும் குறைந்து விட்டது. துரதிருஷ்டவசமாக எக்ஸ்பி&70யின் கதை நடுவானிலேயே முடிந்து போனது. 1966-ஆம் வருடம் எப்-104 விமானம் பறந்து செல்லும் போது உடன் பறந்த அதனுடைய வலது இறக்கையை பதம் பார்த்து விட்டது. இதனால் எக்ஸ்பி-70 வெடித்து சிதறியது. தயாரிக்கப்பட்ட இரு விமானங்களில் தற்போது ஒன்று மட்டுமே மீதமுள்ளது. இது பற்றிய விவரங்களை அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் அமைந்துள்ள அமெரிக்க விமான படை தேசிய அருங்காட்சியகத்தில் காணலாம்.

0 comments:
கருத்துரையிடுக