வந்து போனவர்கள்

திங்கள், 19 டிசம்பர், 2011

மெடிக்கல் மற்றும் இன்சுரன்ஸ் விபரங்களை நிர்வகிக்க உதவும் பயனுள்ள இணையதளம்.

ஒவ்வொரு வருடமும் மெடிக்கல் மற்றும் இன்சுரன்ஸ் பற்றிய விபரங்களை ஓன்லைன் மூலம் நாம் சேமித்து வைக்கலாம்.

இதன் மூலம் தேவைப்படும் நேரங்களில் பணம் மட்டுமின்றி எந்த மருந்து எந்த மாதத்தில் எந்த வருடத்தில் எடுத்துக் கொண்டோம் என்ற தகவல் வரை அனைத்தையும் சேமித்து வைத்து நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.

ஒவ்வொரு மனிதரின் உடலுக்கும் சில மருந்துகள் சரியாக உடனடியாக பொருந்தி

வேலை செய்ய ஆரம்பிக்கும், சில நேரங்களில் குறிப்பிட்ட மருந்து உள்ள மருந்து ரசீது இப்போது தேவைப்படலாம், பெரும்பாலன நேரங்களில் அது நம் கைகளில் கிடைப்பதில்லை.

ஆனால் இனி எளிதாக நொடியில் இணையத்தின் மூலம் நம் மெடிக்கல் மற்றும் இன்சுரன்ஸ் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.

இத்தளத்திற்கு சென்று ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கி ஒவ்வொரு முறையும் நாம் வைத்தியசாலையில் மருந்து எப்போதெல்லாம் வாங்குகிறோம் என்ன மருந்து வாங்கினோம், மருந்தின் விலை என்ன என்பது முதல் அனைத்து தகவல்களையும் சேமிக்கலாம்.

ஒவ்வொரு வருடமும் மருந்துக்காக ஆகும் செலவு என்ன என்பது முதல் மெடிக்கல் இன்சுரன்ஸ் பற்றி தகவல்களையும் தேவைப்படும் நேரத்தில் எளிதாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

புதுமை விரும்பிகளுக்கு மட்டுமல்ல அடிக்கடி ஞாபசக்தி குறைவால் எந்த பொருளை எங்கு வைத்தோம் என்று தெரியாமல் இருக்கும் நபர்களும் இது போல் ஓன்லைன் மூலம் மெடிக்கல் தகவல்களை சேமித்து வைப்பதால் நமக்கு தேவைப்படும் நேரத்தில் எடுக்க உதவியாக இருக்கும்.


Post Comment

0 comments:

கருத்துரையிடுக

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More