வந்து போனவர்கள்

புதன், 14 டிசம்பர், 2011

அதிக ஒளிவீசும் யுரேனியம்!


அதிக ஒளிவீசும் பொருட்களைப் பற்றி பிரெஞ்சு நாட்டு விஞ்ஞானியான ஹென்றி பெரிக்வால் பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து பல உண்மைகளைக் கண்டறிந்தார்.
அவர் அறிந்த பொருட்களில் ஒன்று, யுரேனியம்.
அது ஓர் உலோகப் பொருள். அது இருளிலும் ஒளி வீசும் இயல்புடையதாக இருந்தது.
ஆனால், யுரேனியத்தின் இந்தப் பண்பு குறித்து அறிந்துகொண்டது தவிர, அதனை ஏதாவது ஒரு விதத்தில் பயன்படுத்துவது குறித்து அவரால் எதுவும் தெரிந்துகொள்ள முடியவில்லை.

எனினும், யுரேனியம் தொடர்பான ஆராய்ச்சி யில் அவர் தொடர்ந்து ஈடுபடலானார்.
அந்த வேளையில்தான் அறிஞர் ராண்ட்ஜென் `எக்ஸ் கதிர்களை’ கண்டுபிடித்துப் புகழ்பெற்றிருந்தார்.
எக்ஸ் கதிர்களைப் போல யுரேனியத்தில் இருந்தும் கதிர்கள் வெளிவருவதால்தான் அது இருளிலும் பிரகாசிக்கிறது என்று பெரிக்வால் நினைத்தார். அந்தக் கண்ணோட்டத்தில் அவர் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
ஒருநாள், ஒரு பெட்டிக்குள் கறுப்பு நிறக் காகிதத்தால் நன்கு மூடப்பட்ட புகைப்படம் எடுக்கும் தாளின் மேல் யுரேனியம் உப்பு ஒன்றை பெரிக்வால் வைத்து மூடினார்.
பல நாட்களுக்குப் பிறகு அந்தப் பெட்டியில் இருந்த புகைப்படக் காகிதத்தை வெளியே எடுத்துத் தற்செயலாகக் கருவியில் பார்த்தார். அந்தக் காகிதத்தின் மீது யுரேனிய உப்பு இருந்த இடத்தில் ஒரு கறை இருப்பதை அவர் கண்டார்.
தொடர்ந்து, வெவ்வேறு யுரேனிய உப்புகளைக் கொண்டு, அவ்வாறு மூடப்பட்ட புகைப்படத் தாளில் கறை ஏற்படுகிறதா என்று பெரிக்வால் பரிசோதனை செய்து பார்த்தார்.
எல்லா யுரேனிய உப்புகளாலும் புகைப்படத் தாளில் கறை படிவதை அவர் கண்டார்.
1896-ம் ஆண்டில், யுரேனிய உப்பு போன்றவற்றில் இருந்தும் ஒருவகைக் கதிர்கள் வீசுகின்றன என்றும், அக்கதிர்கள் சில தன்மைகளில் எக்ஸ் கதிர்களை ஒத்திருக்கின்றன என்றும் பெரிக்வால் கூறினார்.
பின்னர் அவர், யுரேனிய தாதுப்பொருளான `பிச்சு பிளென்ட்’டை ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டார்.
அந்தத் தாதுவில் இருந்து வெளிப்பட்ட கதிர்வீச்சு, யுரேனியம் அல்லது யுரேனிய உப்புக்களின் கதிர்வீச்சின் அளவை விடப் பல மடங்கு அதிகரிப்பதைக் கண்டார்.
யுரேனியத்தை விட அதிகக் கதிர்வீச்சுத் திறன் கொண்ட ஏதோ ஒரு பொருள் அந்தத் தாதுவில் இருக்க வேண்டும் என்று பெரிக்வால் கருதினார். அது தொடர்பான முழு உண்மையையும் கண்டுபிடிப்பதற்குள் அவர் மறைந்துவிட்டார். ஆனால், யுரேனியம் பற்றி முதலில் ஆய்வு செய்து உண்மைகளை வெளியிட்டவர் என்று பெரிக்வால் பெயர் நிலைத்துவிட்டது.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More