வந்து போனவர்கள்

வியாழன், 15 டிசம்பர், 2011

`சிவப்பு நாடா’ பெயர் வந்தது எப்படி?

அரசாங்கம், சட்டம் தொடர்பான தாமதங்களுக்கு `சிவப்பு நாடா’ (Redtape) என்று எப்படி பெயர் வந்தது தெரியுமா? இங்கிலாந்து அரசர்கள் சட்ட ஆணைகளைத் தோலால் ஆன காகிதங்களில் எழுதிச் சுருட்டி, சிவப்பு பட்டாலான ரிப்பன்களால் கட்டி வைப்பார்கள்.
பின்னர் அரசாங்கத்தைச் சேர்ந்த அதிகார வர்க்கத்தினர் தங்களுடைய பணிகளுக்கு ஒரு முக்கியமான தோற்றத்தைத் தருவதற்காக சிவப்பு நாடா பழக்கத்தைப் பின்பற்றத் தொடங்கினர். தங்களை அதிகாரிகள்
மிஞ்சக் கூடாது என்பதற்காக வக்கீல்கள் தங்களுக்கு என்று ரிப்பன்களை தேர்ந்தெடுத்துக்கொண்டனர்.
அரசாங்கம் மற்றும் சட்டப் பிழைகளால் ஏற்பட்ட ஏமாற்றத்தைப் பற்றி எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ், `சிவப்பு நாடாவை வெட்டிச் செல்லுதல்’ என்று குறிப்பிட்டார். அதன்பிறகு இது எல்லோராலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More