வந்து போனவர்கள்

வியாழன், 29 டிசம்பர், 2011

உலக மொழிகளின் பிறப்பிடம் ஆப்பிரிக்கா

ஆஸ்திரேலிய நாட்டில் அமைந்துள்ள குயின்ஸ்லாண்ட் பல்கலைகழகத்தின் ஆய்வாளர் குயென்டின் அட்கின்சன் என்பவர் தலைமையில் முதன்முதலில் மொழியானது எங்கு தோன்றியது என ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதில்
, பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்க கண்டத்தில் வாழ்ந்த கற்கால மனிதர்களின் பேச்சில் இருந்து தான் தற்போது பரவலான மக்களால் பேசப்படும் மொழிகளான ஆங்கிலம், வங்காளம், ஜப்பான் மற்றும் இந்தி உட்பட உலகின் பல்வேறு மொழிகளும் தருவிக்கப்பட்டுள்ளன என தெரிய வந்துள்ளது. இந்த ஆய்விற்காக அட்கின்சன், உலகளவில் பேசப்படும் 504 மொழிகளை எடுத்து கொண்டார். அந்த மொழிகளில் பயன்படுத்தப்படும் உச்சரிப்புகள் மற்றும் வெவ்வேறு சப்தங்கள் ஆகியவற்றை ஆராய்ந்தார். ஆய்வில், மொழியானது ஏறத்தாழ 1 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே பேசப்பட்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், தற்காலத்தில் வாழும் மனிதர்கள் சுமார் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவை மையமாக கொண்டு வாழ்ந்துள்ளனர். பின்னர் 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அங்கிருந்து உலகின் பல இடங்களுக்கும் பரவி வாழ ஆரம்பித்துள்ளனர். அதிக மக்கள் தொகை கொண்டவர்கள் ஓரிடத்தில் நிலையாக இருந்து வாழ்ந்த போது அங்கு பேசப்பட்ட மொழியும் நிலைத்துள்ளது. அதுவே, சிறு சிறு குழுக்களாக மக்கள் பிரிந்து செல்லும் போது அவர்களின் இடையே பேசப்பட்ட மொழி காலப்போக்கில் மாற்றம் பெற தொடங்கியது. தலைமுறைகள் மாற மாற மொழிகளும் மாற்றம் பெற்றுள்ளன. அதில், ஆப்பிரிக்காவில் ஆரம்பகாலத்தில் பேசப்பட்ட மொழியின் சப்தங்கள் மற்றும் உச்சரிப்புகள் ஆகியவை படிப்படியாக மறைந்து போயுள்ளன என அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More