வந்து போனவர்கள்

வியாழன், 22 டிசம்பர், 2011

தாம்பத்ய இன்பத்தில் மூளையின் பங்கு

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் அமைந்துள்ள ரட்ஜர்ஸ் பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் பேரி கோமிசருக் என்பவரின் தலைமையில் பெண்கள் தாம்பத்யத்தின் போது அடையும் இறுதிநிலை இன்பம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக பெண்கள் சிலரை வரவழைத்து அவ்வாறு இன்பம் பெறுவது போன்று கற்பனை செய்யும்படி கேட்டு கொள்ளப்பட்டனர்.
பின்னர் அவர்களின் மூளை பகுதிகள் தனியாக எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கொண்டு படம் பிடிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. அந்த ஆய்வில், முடிவெடுக்கும் பகுதி, அவசர நிலையில் செயல்படுதல் மற்றும் கற்பனை திறன் ஆகிய செயல்பாடுகளுக்கான பகுதியாக விளங்கும் ப்ரிப்ரன்டல் கார்டெக்ஸ் (பி.எப்.சி.) உள்பட மூளையின் 30 பாகங்கள் எழுச்சி பெற்று பெண்களின் இன்பத்தின்போது உறுதுணையாக இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், தனிமையில் இருக்கும்போது மேற்குறிப்பிட்ட பாகங்களில் ஒன்று தாம்பத்ய இன்பம் பற்றி கற்பனையை வளர்த்து அதன் வழியே திருப்தியடைவதாகவும், ஆடவன் துணையுடன் தாம்பத்யத்தில் ஈடுபடும் போது மற்ற பாகங்கள் எழுச்சி பெறுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மனிதர்களின் உடலியல் உணர்வுகளான வலி, மகிழ்ச்சி போன்றவற்றை பற்றி ஆராய்ந்து தெளிவு பெறும் நோக்கத்துடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More