வந்து போனவர்கள்

வியாழன், 15 டிசம்பர், 2011

பல் மருத்துவப் பறவை!


`புளோவர்’ என்று ஒரு சிறுபறவை. இது முதலைகளின் பற்களைச் சுத்தம் செய்யும் வைத்தியராகப் பணியாற்றுகிறது.
முதலை, உயிரினங்கள் எல்லாவற்றையும் தின்னக்கூடியது. இரையின் எச்சங்கள் அதன் கோர மான பற்களிடையே சிக்கிக் கொண்டிருக்கும்.
முதலை அசைந்து வாயை மூடினால் போதும். பறவையின் உயிர் போய் விடும். ஆனாலும் முதலை அப்படிச் செய்வதில்லை. தன் பற்களை பறவை
சுத்தம் செய்வதற்காக பொறுமை யாகக் காத்திருக்கிறது. அதே நேரத்தில் பறவைக்கும் தாராளமாக உணவு கிடைத்து விடுகிறது.

இதேபோல் கடல் மீன்களைச் சுத்தப்படுத்தும் ஒருவகை மீன் உள்ளது. அவை ஒரு கோஷ்டியாக இருக்கும். மீன்கள் தம் உடலைச் சுத்தப்படுத்த இவற்றிடம் வருகின்றன. அவற்றின் உடம்பில் உள்ள ஒட்டுண்ணிகள், காளான், பாக்டீரியா போன்றவற்றை சுத்தப்படுத்தும் மீன்கள் சாப்பிட்டு சுத்தப்படுத்துகின்றன. இவற்றின் வேலை முடியும் வரை பெரிய மீன்கள் பொறுமையாக ஒத்துழைக்கின்றன. சுறாமீன்கள் கூட இவ்வாறு தமது உடலைச் சுத்தம் செய்துகொள்கின்றன.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More