கலவர வேளையில் வெளியே ஆட்கள் நடமாடக் கூடாது என்பதற்காக `ஊரடங்கு உத்தரவு’ பிறப்பிக்கப்படுகிறது. அது ஆங்கிலத்தில் `கர்ப்யூ’ (Curfew) எனப்படுகிறது. பிரெஞ்சுச் சொல்லான கவுரே பியூ என்பதில் இருந்துதான் `கர்ப்யூ’ வந்தது. அதன் பொருள், நெருப்பை மூடுவது. வெற்றி வீரர் வில்லியம், இந்தச்
சொல்லை இங்கிலாந்துக்குக் கொண்டுவந்தார்.ஒவ்வொரு தினத்திலும் இரவு எட்டு மணிக்கு அவரவர் வீட்டு நெருப்பை அணைக்க வேண்டும் அல்லது மூடி வைக்க வேண்டும் என்று `சிக்னல்’ அளிக்கப்படும். நெருப்பால் ஏற்படக்கூடிய ஆபத்தைத் தடுப்பதற்காக இந்த கர்ப்யூ சட்டம் முதன்முதலில் கொண்டுவரப்பட்டது. அரசியல் சார்ந்த கொந்தளிப்பு ஏற்படும் சமயத்திலும் அதே கர்ப்யூ மணி அடிக்கப்படும். அதன்மூலம், மக்கள் அவரவர் வீடுகளிலேயே இரவு தங்கியிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
0 comments:
கருத்துரையிடுக