வந்து போனவர்கள்

திங்கள், 12 டிசம்பர், 2011

`டொமட்டோ’ பெயர் வந்த விதம்!

மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது, தக்காளி. அஸ்டெக் (Aztect) மொழியில் அது Tomatl என்று அழைக்கப்பட்டது. ஸ்பெயின் நாட்டவர்கள் 1604-ல் இதை ஐரோப்பாவில் Tomate என்ற பெயரில் அறிமுகம் செய்தனர். முன்பு அமெரிக்காவில் இருந்து அறிமுகமான Potato வுக்கு எதுகையாக இது Tomato என்று இங்கிலாந்தில் அழைக்கப்பட்டது.
தக்காளி சேர்ந்திருக்கும் தாவரக் குடும்பத்தில் உள்ள மற்ற செடிகள் விஷத்தன்மை வாய்ந்த ரசாயன மூலப்பொருள் உடையவை. அதனால் ஸ்பெயின் நாட்டவரும், இத்தாலி நாட்டுக்காரர்களும் இதைச் சாப்பிடக்கூடியது என்று கருதி உண்டபோதிலும், ஆங்கிலேயர் இதை விஷத்தன்மை உடையதாக நினைத்தனர். எனவே அவர்கள் ஆரம்பத்தில் அலங்காரச் செடியாக மட்டுமே இதைப் பயன்படுத்தினர்.


அமெரிக்கர்கள் இதை உணவாக ஏற்றுக்கொண்ட பிறகே ஆங்கிலேயர்கள் தமது தினப்படி உணவில் சேர்க்கக்கூடிய முக்கியப் பொருளாக தக்காளியை அங்கீகரித்தனர்.

தக்காளி மோகத்தைத் தூண்டும் உணவாகக் கருதப்பட்டதால் அதற்கு லவ் ஆப்பிள் என்ற பெயர் கொடுக்கப்பட்டது. `டொமாடில்’ என்ற அஸ்டெக் மொழிச் சொல்லுக்கு `வீங்கும் செடி’ என்று பொருள்.

தாவரவியல்படி தக்காளி ஒரு பழமாகக் கருதப்பட்டாலும், 1893-ல் அமெரிக்க உயர்நீதிமன்றம் வணிகக் காரணங்களுக்காக இதை காய் என்று அறிவித்தது. உணவாகப் பயன்படும் காரணத்தால் இது காய் என்று பெயர் பெறுகிறதே தவிர, தாவரவியல் பொருளில் அல்ல.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More