வந்து போனவர்கள்

திங்கள், 2 ஜனவரி, 2012

2013ல் ஏற்படும் சூரிய புயலால் பூமிக்கு ஆபத்து

அமெரிக்க நாட்டின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல அமைப்பின் உதவி செயலாளரான காத்ரின் சுல்லிவன் என்பவர் 2013-ஆம் ஆண்டில் சூரிய புயலால் பூமியில் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். 11 வருட இயற்கை சுழற்சியில் சூரியன் அதிக பலம் பெறும் அந்த ஆண்டில் இந்நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. முதன்முதலாக கடந்த 1859ஆம் ஆண்டு இங்கிலாந்து வானியலாளர் ரிச்சர்ட் கேரிங்டன்
என்பவர் சூரிய புயலை கண்டறிந்தார். சூரியனில் ஏற்படும் மிக பெரும் வெடிப்பால் சூரிய புயல் உண்டாகிறது. இதன் மூலம் எக்ஸ் கதிர்கள் மற்றும் புற ஊதா கதிர்கள் ஆகியவை பெருமளவில் வெளிப்படும். இவை பூமியின் காந்த புலத்தினை அதிகமாக பாதிக்கும் வலிமை கொண்டது. எனவே, இங்குள்ள கணினியின் செயல்பாடுகளில் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பாதிப்பு ஏற்படும். குறிப்பாக வானொலி அலைவரிசையில் பாதிப்பு, செயற்கைகோள் தகவல் தொடர்புகள் மற்றும் வரைபட வழிகாட்டி ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. 20-ஆம் நூற்றாண்டில், அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலத்தில் 1972-ஆம் வருடம் தகவல் தொடர்பில் பாதிப்பு மற்றும் 1989-ஆம் வருடம் கனடா நாட்டின் கியூபெக் மாகாணத்தில் மின்சார பரிமாற்ற பணிகளில் பாதிப்பினை ஏற்படுத்தி இருளில் மூழ்க செய்தது போன்ற தாக்கத்தை ஏற்படுத்தியதில் சூரிய புயல் பெரும் பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More