வந்து போனவர்கள்

திங்கள், 12 டிசம்பர், 2011

நீர்மூழ்கிக் கப்பல்!

நீர்மூழ்கிக்கப்பல் தண்ணீரில் அமிழ்வதற்குத் தேவையான நடவடிக்கை மிகவும் எளிதானது. நீர்மூழ்கிக்கப்பலின் எடை, அதை மிதக்க வைக்கும் தண்ணீரின் சக்தியை விட அதிகரிக்கும்படி செய்கிறார்கள். இதை எப்படிச் செய்வது? நீர்மூழ்கிக்கப்பலை மிதக்க வைக்கும் காற்று அடங்கிய டாங்குகளில் கடல் தண்ணீர் புகவிடுகிறார்கள்.
காற்றின் இடத்தைக் கடல் தண்ணீர் பிடித்துக்கொள்கிறது.

நூற்றுக்கணக்கான டன் எடையுள்ள தண்ணீர், டாங்குகளில் நிறைகிறது. அதன் விளைவாக நீர்மூழ்கிக்கப்பலின் எடை அதிகரிக்கிறது. அதன் இருப்பில் உள்ளதாகக் கருதப்படும் மிதக்கும் திறன் அகற்றப்படுகிறது. இருப்பில் உள்ள மிதக்கும் திறன் என்றால் என்ன? நீர்மூழ்கிக்கப்பல் மிதக்கும்போதும், முழுமையாக அமிழும்போதும் இடர்ப்பெயர்ச்சி ஆகும் தண்ணீரின் எடைக்கு இடையே உள்ள வித்தியாசம்.

நீர்மூழ்கிக்கப்பல், அதன் டாங்குகளில் உள்ள தண்ணீர் இரண்டின் எடையும் சேர்ந்து இடப்பெயர்ச்சி ஆகும் தண்ணீரின் எடையை விட அதிகமாக இருந்தால் நீர்மூழ்கிக்கப்பல் மூழ்கிவிடும். அதிகபட்சமாக நீர்மூழ்கிக்கப்பல் 600 அடி ஆழம் வரை செல்லலாம். அதற்கு அதிகமான ஆழத்தில் நீர்மூழ்கிக்கப்பலின் உடற்பகுதியை தண்ணீர் பயங்கரமாக அழுத்தும் அபாயம் ஏற்படும்.

நீர்மூழ்கிக்கப்பலை ஒரு குறிப்பிட்ட ஆழத்தில் நிறுத்தி வைப்பதற்கு மின்சார மோட்டார்கள் மூலம் அதிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அதாவது நீர்மூழ்கிக் கப்பலின் எடை, இடப்பெயர்ச்சி ஆகும் தண்ணீரின் எடைக்குச் சமமாகும்வரை தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அப்போது நீர்மூழ்கிக்கப்பல் மேலேயும் போகாது, கீழேயும் போகாது.

நீர்மூழ்கிக்கப்பல், கடல் மட்டத்துக்கு வருவதற்கு டாங்குகளில் உள்ள தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. அப்போது நீர்மூழ்கிக்கப்பலின் எடை, இடப்பெயர்ச்சி ஆகும் தண்ணீரை விட இலேசாகிவிடுகிறது. கப்பலும் மேலே வந்துவிடுகிறது.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More