வந்து போனவர்கள்

திங்கள், 12 டிசம்பர், 2011

நாணயத்தைச் சுண்டுதல்!

கி.மு. 10-ம் ஆண்டில் லிடியாவைச் சேர்ந்தவர்கள் நாணயத்தைத் தயாரித்தனர். ஆனால் அதற்கு 900 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஒரு முடிவை எடுப்பதற்காக நாணயத்தைச் சுண்டுவது வழக்கத்துக்கு வந்தது.

ஜூலியஸ் சீசர் காலத்தில் ரோமாபுரி நாணயத்தின் ஒரு பக்கத்தில் அவர் தலை பொறிக்கப்பட்டிருக்கும்.

அவர் மீது மக்களுக்கு மிகப் பெரிய மரியாதை இருந்தது. மிக முக்கியமான வழக்குகளில் சீசர் இல்லாத நேரத்தில் அவர் தலை பொறிக்கப்பட்ட நாணயத்தைச் சுண்டுவதன் மூலம் முடிவு தீர்மானிக்கப்பட்டது.

ஜூலியஸ் சீசரின் தலைப்பக்கம் மேலே தெரியும்படி நாணயம் விழுந்தால், அந்தப் பிரச்சினைக்கான தீர்வை கடவுளின் வழிகாட்டுதலின்படி சீசர் இல்லாமல் போனாலும் அவர் ஏற்கிறார் என்று கருதப்பட்டது.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More