நாசாவினுடைய LCROSS எனப்படும் லூனார் அப்செர்வேசன் மற்றும் சென்சிங் செயற்கைக்கோள் (Lunar Crater observation and Sensing Statellite) நிலவில் நீர் இருப்பதை இவ் வாண்டு நவம்பர் 13-ஆம் தேதி உறுதிசெய்தது.
அமெரிக்காவின் நாசா 2009, ஜூன் 18-ஆம் தேதி நிலவினை ஆராய விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலம் L CROSS மற்றும் LRO (லூனார் ரெகனைசன்ஸ் ஆர்பிட்டர்) ஆகிய இரண்டும் இணைந்தவை.
L CROSS விண்கலமானது சென்டார் எனும் உயர்ரக ராக்கெட்டுடன் பொருத்தப்பட்ட தாகும். விண்ணில் சென்று புவியை ஒரு சுற்றுப் பாதையில் வலம் வந்து LRO விலிருந்து பிரிந்து நிலவின் பரப்பில் சென்று மோதுவதற் கான ஆயத்தங்களை செய்தது. பின்னர் நிலவை அதன் மிகக் குறைந்த தொலைவில் வலம் வந்து சென்டார் எனும் ராக்கெட்டும், L CROSS ம் இருவேறு பாகங்களாக பிரிந்தது.அமெரிக்காவின் நாசா 2009, ஜூன் 18-ஆம் தேதி நிலவினை ஆராய விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலம் L CROSS மற்றும் LRO (லூனார் ரெகனைசன்ஸ் ஆர்பிட்டர்) ஆகிய இரண்டும் இணைந்தவை.
பொதுவாக L CROSS இருவகையான நிறமாலைமானிகளை கொண்டுள்ளது. ஒன்று அகச்சிவப்பு நிறமாலைமானி மற்றொன்று புறஊதா நிறமாலைமானி.
இருவேறு பாகங்களாக பிரிந்ததில், ராக்கெட்டானது ஒரு துப்பாக்கி ரவையின் வேகத்தில் பயனித்து நிலவின் மேற்பரப்பில் மோதியது. இந்த மோதலினால் அதன் பரப்பில் மேலெழும்பிய புழுதி துகள்களின் தெறிப்பினை அதனை தொடர்ந்து வந்த L CROSS-ன் நிறமாலைமானியானது ஆராய்ந்தது. மோதல் நிகழ்ந்த 15 நிமிடத்தில் புழுதியானது 6 முதல் 8 கி.மீ. வரை பரவியது.
L CROSS - நிலவின் பரப்பை தொடும் வரையான சுமார் 4 நிமிட நேர இடைவெளியில் புழுதி யின் துகள்களை நிறமாலைமானி பதிவு செய்தது.
சென்டார் மோதலினால் ஏற்பட்ட புழுதி துகளானது இருவேறு பாகமாக பிரிக்கப் பட்டது. அதன் மேல்பாகம் நுண்ணிய தூசுத் துகள்களையும், ஆவி நிலையிலுள்ள துகள் களையும் கொண்டது. அதன் அடிப்பாகத் தில் கனமான துகள்களைக் கொண்டது.
L CROSS-ன் அகச்சிவப்பு நிறமாலைமானி நீராவியின் 1.4 முதல் 1.85 மைக்ரான் அலை நீளமுள்ள உட்கவர் பட்டைகளை பதிந் தனுப்பியது. அதன் புற ஊதா நிறமாலை மானி 309 நானோ மீட்டர் புற ஊதாக் கதிர் உமிழ்வுகளை பதிவு செய்து அனுப்பியது. இது சூரியனிலிருந்து வரும் புறஊதா கதிர் வீச்சினால் நீர் மூலக்கூறு உடைந்து ஹைட் ராக்ஸிஸ் (OH) மூலக்கூறு உருவாக்கப்பட்டதன் அறிகுறியாகும். நிலவின் மேற்பரப்பில் நிழல்படிந்த பகுதியில் நீர் இருப்பதை இந்த ஆய்வின் முடிவுகள் உறுதிப்படுத்தின.
இதற்கு முன்பே இந்தியாவின் சந்திர யான்- 1 நிலவில் நீர் இருப்பதற்கான ஆதாரத்தை கண்டுபிடித்தது என்பது நாம் பெருமை கொள்ள வேண்டிய ஒன்று.
காமா கதிர் வெடிப்பு மிகத் தொலைவிலுள்ள பால்வீதியில் காமா கதிர் வெடிப்பு மிக அதிக ஆற்றலு டன் நிகழ்ந்து காமாக் கதிர்களை வெளியிடு கிறது. இவ்வகை வெடிப்புகள்தான் மிக அதிக ஒளிரும் தன்மையுடைய வெடிப்பு களாகும். மிக அதிகமான நட்சத்திரக் கூட்டங்கள் அணு எரிசக்தியின்றி போவதே இது நிகழக் காரணம். முந்தையக் காலங்களில் அண்டங்களிலுள்ள கூட்டமான நட்சத்திரங் களில் அதன் எரிசக்தியான ஹைட்ரஜன் மற்றும் ஹீ-யம் தீர்ந்துவிடுவதால் திடீரென இறந்து போகின்ற நட்சத்திரங்களின் நிகழ்வு தான் தற்போதைய அண்டக் கொள்கைக்கு ஆதாரம்.
அறிந்த காமா கதிர்வெடிப்பு எதுவென்றால், மிக குறுகிய ஒளிக்கற்றையாலான, அடர்ந்த, சூப்பர் நோவா நிகழ்வின்போது வெளியிடப் படுகிற ஒளிக் கதிர்வீச்சு. இது திடீரென சுழலக்கூடியதும், மிக அதிக நிறையிலான நட்சத்திரம் சிதைந்து கரும் புள்ளி ஏற்படுகிற நிகழ்வாகும்.
சுமார் 13000 மில்லியன் ஒளியாண்டு தொலைவில் ஒரு நட்சத்திரம் சிதைந்து கரும் புள்ளியாக மாறியதை சமீபத்தில் வானவியலர்கள் படம் பிடித்தனர். அதற்கு GRB 090423 என்று பெயரிட்டுள்ளனர். அதாவது அதன் கண்டுபிடிப்பு நிகழ்ந்த தேதியை அதன் பெயராக இட்டுள்ளனர். இதனையே மிகத் தொலைவில் நிகழ்ந்த காமாக் கதிர் வெடிப்பு எனலாம்.
காமாக் கதிர் வெடிப்பின் நிகழ்வுகளை நாசாவின் ஸ்விப்ட் செயற்கைக்கோள் ஏப்ரல் 2009-இல் கண்டுபிடித்தது. அது கண்டு பிடித்த மூன்று மணி நேரத்திற்குள் அதே இடத்தில் அகச் சிவப்பு கதிர்களை இங்கிலாந் தின் ஹவாய் தீவுகளில் அமைந்துள்ள அகச் சிவப்பு கதிர் தொலை நோக்கி (VKIT) பதிவு செய்தது. மிகப்பெரிய நட்சத்திரமானது உடைந்து, மிகக் குறுகிய நேரம் நீடிக்கக்கூடிய, வெவ்வேறு அலை நீளம் கொண்ட ஒளி தெறிப்புகளை உண்டாக்குகிறது. இதனை புவியிலிருந்து தொலைநோக்கிகள் மூலம் காணலாம்.
ஸ்விப்ட் செயற்கைக்கோள்தான் முதன் முதலில் காமாக் கதிர் வெடிப்பு கண்டறிய பயன்படும் பல அலைநீள கண்காணிப்பான் ஆகும். இதனுள் அமைக்கப்பட்ட மூன்று கருவிகள் இணைந்து காமா கதிர் வெடிப்பு மற்றும் அதன் பின்னர் நிகழும் ஒளித்தெறிப்பு, X- கதிர்கள் புற ஊதாக் கதிர்கள், ஒளி அலை பட்டைகள் போன்றவற்றை அறிய உதவும்.
இதுபோன்ற தொலைவில் உள்ள நட்சத்திரங்களில் ஏற்படும் மாற்றங்களை கண்டுபிடிப்பது, அண்டம் எவ்வாறு உருவானது என்பதை அறிய வழி பிறக்கும். இந்த ஏதஇ 090423 கண்டுபிடிப்பானது, பெருவெடிப்பு நிகழ்ந்த மிகக் குறுகிய காலத்திற்குள் உருவானதாக கருதப்படும் நட்சத்திரங்கள்தான் முதல் தலைமுறையை சேர்ந்தவை என்ற கூற்றை பொய்யாக்குகிறது. மேலும், நட்சத்திரங் கள் பெரும் வெடிப்புக்கு முன்னரே தோன்றியும் அழிந்தும் இருக்கக் கூடும் என்ற உண்மை தெரிய வருகிறது.
டைனோசரின் நிறம் டைனோசரை வெள்ளித் திரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர். அவை நிஜமல்ல. கணினியின் உதவியால் உருவாக்கப்பட்ட கிராபிக்ஸ் உருவங்கள். உண்மையில் டைனோசரின் உண்மையான நிறம் எதுவென்று யாருக்கும் தெரியாது. கடந்த இரு நூற்றாண்டுகளாக டைனோசர் எதைப்போன்று இருக்கும் என்பதை கற்பனையில் உருவாக்கப் போராடிக் கொண்டிருந்தனர். அதன் உருவம், எடை மற்றும் நகரும் விதம், ஒலி எழுப்பும் முறை ஆகியவை தற்போதைய உடற் கூறுவியல் மற்றும் விலங்கியல் போன்றவற்றின் அடிப்படையிலேயே உருவாக் கப்பட்டன. டைனோசரின் தோற்றம் மற்றும் நிறம் தற்காலம் வரை அறியப்படாத ஒன்றாகவே விளங்கியது.
தற்போது டைனோசரின் படிவங்களில் நிறமிகள் உள்ளதை ஆராய்ச்சியில் கண்டு பிடித்துள்ளனர். இது பண்டைய விலங்கு களின் உண்மையான நிறங்களை அறிய புதிய வாயிலை திறந்துள்ளது. மேலும் உண்மையான நிறமுள்ள மாடல் டைனோசர்களின் மறுஉருவாக்கத்திற்கும் அடித்தளமிட்டுள்ளது. சீனாவின் உயிரியல் ஆய்வகத்தில் புசெங் ஷாங் என்பவரின் தலைமையின் கீழ் செயல்பட்ட குழுவானது முதன்முறையாக இதனை கண்டுபிடித்து வெளியிட்டது. வடகிழக்கு சீனாவில் கண்டுபிடிக்கப்பெற்ற பறவைகள் மற்றும் டைனோசர்களின் படிமங்களில் மெல்லிய நுண்ணிழை போன்ற நிறமிகள் கொண்ட உறுப்புகள் அதன் இறகுகளில் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இது மெலனோ சோம்பிகள் என அழைக்கப்படுகிறது.
இது தற்போது வாழும் பறவைகளின் இறகுகளிலும் இருப்பதை உறுதி செய்துள் ளனர்.
சுமார் 125 மில்லியன் ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த டைனோசர்களின் உடலில் திட்டுத் திட்டாக கருப்பு வெள்ளை நிறமிகள் இருந்ததாகவும், அதன் இறகுகள் ஆரஞ்சு மற்றும் மரக்கலராக காணப்பட்டது எனவும் கண்டறிந்தனர். அதே பகுதியில் ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வைகளில் வெள்ளை, ஆரஞ்சு, மரகலர் கோடுகள் அதன் வால் பகுதியில் மாறிமாறி காணப்பட்டதாகவும் கண்டறிந்துள்ளனர்.
மெலனோசோம்கள் எனும் நிறமி பல மில்லியன் ஆண்டுகள் பழமையானது. எனவே பல வேதியியல் மாற்றங்கள் நிகழ்ந் திருக்கலாம். அதனால் அது அதன் உண்மையான நிறத்தை வெளிப்படுத்தாது என்ற மாற்றுக் கருத்து இருப்பினும், நிகழ் காலத்தில் வாழ்ந்து கொண்டி ருக்கும் பறவைகளில் அதே அளவும், அமைப்பும் உள்ள நிறமிகள் இருப்பது மாற்றுக் கருத் தின் உண்மை தன்மையை தள்ளு படி செய்துவிடுகிறது.
0 comments:
கருத்துரையிடுக